மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிற்றம்பலம் சதாசிவம்
வயது 816 பிப்ரவரி, 1938 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- சுருவில்
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சுருவிலைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சிற்றம்பலம் சதாசிவம் அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிற்றம்மபலம் சீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், தாமோதரம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ருக்மணி(தேவி) அவர்களின் அன்புக் கணவரும்,
தட்ஷாயினி(கனடா), நந்தினி(அவுஸ்திரேலியா), வைதேகி(கனடா), மயூரன்(கனடா), சுகந்தினி(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அன்னம் அவர்களின் அன்புப் பெறாமகனும்,
கேதீஸ்(கனடா), சிவகாந்தன்(அவுஸ்திரேலியா), வாகீசன்(கனடா), கிறிஸ்ணி(கனடா), தினேஸ்குமார்(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கருணைநாயகி(கனடா), காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி(இந்திரா), கோபாலகிருஷ்ணன்(சபா) மற்றும் யோதீஸ்வரி(சந்திரா) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
சிவசுப்பிரமணியம்(கனடா), காலஞ்சென்றவர்களான குமாரசாமி, சிதம்பரநாதன், சண்முகநாதன், சுப்பையா, சிவக்கொழுந்து, தேவயானி, நாகலிங்கம், கனகசுந்தரம்(சிவசாமி) மற்றும் மகாலக்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சிவயோகநாதன்(லண்டன்), தமிழ்ச்செல்வி(கனடா), சிவகுமாரன்(கனடா), காலஞ்சென்ற ரேணுகா, சுதர்சன்(பிரான்ஸ்), ஆர்த்திகா(பிரான்ஸ்), Dr. சாமினி, நிசாந்தன்(லண்டன்) ஆகியோரின் தாய்மாமனும்,
வைஷாளி, சேரன், றம்மியா, நிதீபன், ஓவியா, அபிநயா, அனோஷ், அரண், திவ்யன், திறிவாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 07-09-2019 சனிக்கிழமை அன்று 260/15. ஸ்ரான்லி வீதி யாழ்ப்பாணம் எனும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று சுருவில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் சுருவிலில் 06/FEB/1938 இல் திரு.திருமதி சிற்றம்பலம் சீதாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனாக திரு.சதாசிவம் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் கருணைநாயகி, புவனேஸ்வரி, கோபால கிருஷ்ணன், யோதீஸ்வரி எனும் சகோதரர்களுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி தாமோதரம்பிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகள் ருக்மணி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தட்ஷாயினி, நந்தினி, வைதேகி, மயூரன், சுகந்தினி எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து கேதீஸ், சிவகாந்தன், வாகீசன், கிறிஸ்ணி, தினேஸ்குமார் போன்றோரை திருமணம் முடித்து வைத்து வைஷாளி, சேரன், றம்மியா, நிதீபன், ஓவியா, அபிநயா, அனோஷ், அரண், திவ்யன், திறிவாசன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் கனடா நாட்டில் தற்காலிகமாக வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் கொண்ட இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04.09.2019 இல் 81 வயதில் யாழ்ப்பாணத்தில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
“நமது தந்தை நல்லுள்ள மனம்
தமது வாழ்வை தாரைவார்த்து
எமது வாழ்வில் ஒளி ஏற்றிய
இனிமை உறவே இன்ப மனமே
கருனை தாரும் இறைவா
வெறுமை மனமுடம் தவிக்கிறோம்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

