மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் செல்வகுமார்
வயது 761 ஏப்ரல், 1943 – 16 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மண்டைதீவு
- வாழ்ந்த இடம்
- மண்டைதீவு, கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மண்டைதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும், கனடாவை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானம் செல்வகுமார் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளின் தவப்புதல்வரும், நவரட்ணம் சிவபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவநீதகல்யாணி அவர்களின் அன்புக் கணவரும்,
யசோக்குமாரி, இராஜகுமார், விஜயகுமார், காலஞ்சென்ற ஜீவகுமார், யகுணகுமாரி, ஜெயக்குமார், சுகுணகுமாரி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவா, ஆனந்தரூபி, தவச்செல்வி, காலஞ்சென்ற யோகரட்ணம், மஞ்சுளா, நவமேனன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
செல்வராஜா, சிதம்பரநாதன், காலஞ்சென்ற சிரோன்மணி, திருநாவுக்கரசு ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தையல்நாயகி, சந்திரமதி, காலஞ்சென்ற நவமணி, சிறிறதிவதனா, காலஞ்சென்றவர்களான வரதலெட்சுமி, வரதராஜா, அருள்நந்திநாதன், மற்றும் விஜயலட்சுமி, பங்கயற்செல்வி, நவநீதநாதன், சிவசுதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சங்கீதை, சாரங்கி, அஜீவன், செந்தூரன், பிரணவி, லக்ஷமி, ஆகாஷ், அபிஷா, திஷான், தர்ஷானி, திவாணி, நவஜீவன், திலக்ஷிகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த மண்டைதீவு 1ஆம் வட்டாரம் 01-04-1943 இல் சிவஞானம் ஆச்சிப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் செல்வகுமார் அவர்கள் செல்வராஜா, சிதம்பரநாதன், சிரோன்மணி, திருநாவுக்கரசு ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த தீவில் அவதரித்தார்.
மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் நவரட்ணம் சிவபூரணம் தம்பதிகளின் அழகுப் பெண்ணான நவநீதகல்யாணி அவர்களை திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து யசோக்குமாரி, இராஜகுமார், விஜயகுமார், ஜீவகுமார், யகுணகுமாரி, ஜெயக்குமார், சுகுணகுமாரி எனும் அன்பு நிறைந்த பிள்ளையைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டதுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16-04-2019 இல் 76 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"மண்டைதீவு மகனே
மங்காப் புகழே
மான வீரனே
மாட்ச்சி உடையவரே
அன்பு வதனம்
அருமைப் பேச்சு
அனைத்தும் பிரிந்து
அழுது புலம்புகிறோம் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

