மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகணேசன் சுதர்சன்
வயது 4024 மார்ச், 1979 – 4 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை நெடியகாட்டைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகணேசன் சுதர்சன் அவர்கள் 04-04-2019 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(கார்கார சபா) காமாட்சிபிள்ளை தம்பதிகள், காலஞ்சென்ற தணிகாசலம், வள்ளியம்மைபிள்ளை தம்பதிகளின் அன்புப் பேரனும்,
சிவகணேசன் குணரகிதம் தம்பதிகளின் ஏகப் புதல்வரும்,
ஜெயகீதா அவர்களின் கணவரும்,
டிஷாந்தன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
பாரதி, தாரகி, சுதர்சினி, நிரோஜினி ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
கமல்ராஜ், கணேசலிங்கம், வினோத், அபிமன்யு ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
அபிரன், கரிகாலன், ஹரிதரேன், கிரோஷன், நிபர்ணிகா, அஜய், அக்ஷியா ஆகியோரின் பாசமிகு மாமனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், வடமராட்சியின் வீரமிகு பூமியும் எழுச்சிமிகு இளைஞர் படையக் கொண்டுள்ளதும் எதுக்கும் அஞ்சா மனங்கொண்டவர்கள் வாழும் இடமும் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த வீரமிகு வல்வெட்டித்துறையின் நெடியகாட்டில் 24-03-1979 இல் சிவகணேசன் குணரகிதம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் சுதர்சன் அவர்கள் பாரதி, தாரகி, சுதர்சினி, நிரோஜினி ஆகிய சகோதரர்களுடன் இவ் அழகிய வீரம் நிறைந்த ஊரில் அவதரித்தார்.
மேலும் ஆளுமையும் அறிவும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் அழகுப் பெண்ணாண ஜெயகீதா அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து டிஷாந்தன் எனும் அன்பு நிறைந்த ஆண் பிள்ளையை பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் நன்கு அறிவு நிறைந்தவராகவும் வாழ்வில் நற் பண்பும் ஒழுக்கமும் நிறைந்த இவர். வயது வேறுபாடின்றி சகலருடனும் நட்பாக பேசிப் பழகும் அன்பு மனம் கொண்டவர். இதேவேளை இவரைச் சூழ்ந்து எப்போதும் நண்பர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும், இவர் நண்பர்களுக்கு விருந்தளிப்பதில் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக இவர் வைக்கும் ரசத்துக்கு விலை கிடையாது அவ்வாறு சுவை அதிகமாக இருக்கும்.
இவ்வாறு மனைவி, பிள்ளை நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 04-04-2019 இல் 40 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"நெடியகாடு தந்த
நேச மலையே
நண்பனின் தோழனே
நற் பண்பானவனே
நல் உதவி செய்யும்
நன்றி மறவாதவனே
நாம் உமை நினைத்து
கண்ணீர் வடிக்கிறோம் "
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

