15ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானசுந்தரம் கஜீபன்
மாணவர்- வயம்ப பல்கலைக்கழகம்
வயது 2416 நவம்பர், 1980 – 6 ஜூலை, 2005
- பிறந்த இடம்
- மல்லாவி யோகபுரம்
- வாழ்ந்த இடம்
- மல்லாவி யோகபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு மல்லாவி யோகபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சிவஞானசுந்தரம் கஜீபன் அவர்களின் 15ம் ஆண்டு நினைவஞ்சலி.
கறையில்லா செல்வம் கருணை சேர் உள்ளம்
கலந்து வடித்த எங்கள் கஜீப சித்திரமே
நிறைவாழ்வு தன்னை நிலவாழ்வு தன்னில்
நெறியோடு வாழ்ந்திட்ட ஒளி தீபமே
முறையான அன்பு நிறைவான பண்பு
முழுவதும் சேர்ந்து அமைந்த பொற்குடமே
குறை தன்னைப் போக்கும் மருந்தாக நின்று
குறிப்பறித்து உதவி செய்த குணக்குன்றமே
இறையன்பு, பிறரன்பு, விருந்தோம்பல் தன்னில்
எம்போதும் பெயர் பொறித்த பெரு விருட்சமே
உறைந்திட்ட அதிர்ச்சியால் நாம் இன்னும் மீளவில்லை
உயிர்நீத்து மூவைந்து ஆண்டுகள் ஆகியும்
உறைவிடம் விண்ணில் உண்டெனில் அங்கு
உறைவிடம் உமக்கொன்று உண்டு உண்மை
பிறைசூடிய பெருமானவன் பிரசன்னம் தன்னில்
பேரின்ப சொர்க்கத்தில் சாந்தி பெறுக
— குடும்பத்தினர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

