நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவஞானம் காசிவிஸ்வநாதன்
வயது 733 நவம்பர், 1945 – 26 ஜூன், 2019
- பிறந்த இடம்
- சங்குவேலி
- வாழ்ந்த இடம்
- Harrow
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஎமது குடும்பத்தின் குலவிளக்காய் வாழ்ந்து எமையெல்லாம் வழிநடத்திய அன்புத் தெய்வத்தை இழந்து ஆறாத்துயரில் ஆழ்ந்திருந்த எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி, அனுதாபம் தெரிவித்தோருக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தியோருக்கும், இறுதி நிகழ்வில் கலந்து கொண்டு ஆறுதல் தந்தோருக்கும், தூர தேசங்களில் இருந்தும், தாயகத்தில் இருந்தும் தொலைபேசி மூலமும் ஆறுதல் தெரிவித்தோருக்கும் மற்றும் பல உதவிகளில் எமக்கு உறுதுணையாய் நின்றோருக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்ததுள்ள யாழ்ப்பாணத்தின் சங்குவேலியில் புகழ் பூத்த சீமான் திரு.சிவஞானம் செட்டியார் அவர்தம் பாரியார் திருமதி சின்னம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 03/NOV/1945 ஆம் ஆண்டில் திரு.காசிவிஸ்வநாதன் அவர்கள் செல்வரதி, இன்பரதி, அரசகுலநாதன், விக்கினேஸ்வரன், பாரதி, ஸ்ரீஸ்கந்தநாதன் எனும் அன்பு உடன்பிறப்புடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.
அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டதுடன், திரு.திருமதி சபாரட்ணம் கனகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் ரவினி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சிவாந்தினி, பிரசாந்தினி, சுரேசன் போன்ற அழகுப் பிள்ளைகளைப் பெற்று ஆரணன், சேந்தன் என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ஆதினி, கிஷோன், ஐஷானி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 26.06.2019 இல் 73 வயதில் பிரித்தானியாவில் உள்ள Harrow நகரில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"இன் முகம் கொண்டு
......இதழ் விரித்து
பன்முக அறிவை
......பாரில் பெற்று
வன் சொல்லை
..... வாழ்வில் தவிர்த்து
அன்பாய் வாழ்ந்து
.....அகிலம் துறந்தீரே"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

