ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவஞானராஜா இராஜேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவஞானராஜா இராஜேந்திரம்

வயது 6129 மார்ச், 1958 – 17 மே, 2019

பிறந்த இடம்
நல்லூர்
வாழ்ந்த இடம்
Neustadt

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நல்லூர் மூர்த்த விநாயகர் கோவிலைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Neustadt W/Str வை வசிப்பிடமாகவும் கொண்ட சிவஞானராஜா இராஜேந்திரம் அவர்கள் 17-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற இராஜேந்திரம், பூரணம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவகுரு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

வனிதா அவர்களின் அன்புக் கணவரும்,

தினேஸ், சபினா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சரஸ்வதி(இலங்கை), சிவபாலு(இலங்கை), அருள்(இலங்கை), ரவி(பிரான்ஸ்), மோகனா(இலங்கை), வதனா(ஜேர்மனி), றெஜினா(கனடா), சுதா(இலங்கை), ராஜன்(லண்டன்), தர்சினி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகேந்திரம்(இலங்கை), தவமலர்(இலங்கை), ராணி(இலங்கை), சுபா(பிரான்ஸ்), தேவராசா(இலங்கை), ராஜன்(ஜேர்மனி), சுதாகர்(கனடா), வசந்தன்(இலங்கை), வனிதா(லண்டன்), தயாபரன்(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ராசாத்தி(இலங்கை), சண்முகதாஸ்(பெல்ஜியம்), றெஜினா(இலங்கை), சிவதாஸ்(ஈசன்- இலங்கை), தனா(கொலண்ட்), மோகனதாஸ்(றூபன்- இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

காலஞ்சென்ற அனுசுயா, நிரோஷன், சயந்தன், சுகன்ஜா, தீபா, லெசா, சுகந்தன், சியாமினி, தஜீன், துசான், சுஜீன், ஜோயல், சுவீற்ரி, டினுஜா, தனிஸ், பிரவீன், கஜனிக்கா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தர்ஷன், நிஜிதா, தனுசா, மதுமிதா, சாரங்கன், ஜெயரங்கன், கபிஸ், கரிஸ்மா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

அனோஜன், நிசாந்தன், பிரவீனா, சதிஸ்காந் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய இடமும் வரலாற்று சிறப்பு மிக்க முருகன் ஆலயம் அமைந்துள்ளதும்,நெல்வயல்கள்,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நல்லூர் மூத்த விநாயகர் கோவிலடியில் இராஜேந்திரம் பூரணம் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சிவஞானராஜா அவர்கள் 29/Mar/1958 இல் அழகு நிறைந்த இவ் ஊரில் சரஸ்வதி, சிவபாலு, அருள், ரவி, மோகனா, வதனா, றெஜினா, சுதா, ராஜன், தர்சினி போன்ற உடன்பிறப்புகளுடன் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சிவகுரு சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகள் வனிதா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து தினேஸ், சபினா ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன், மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் சிவா என அன்பாக அனைவராலும் அழைக்கப்படும் இவர், எப்போதும் புன்னகை முகத்துடன்,நகைச்சுவையாக பேசும் குணம் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார் இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,சகோதரங்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 17.05.2019 இல் 61 வயதில் ஜேர்மனியில் உள்ள Neustadt நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

நல்லூரில் வந்து உதிர்த்த
......நல் உள்ளமே
நன்மைகள் செய்து மகிழ்ந்து
.......நன்றாக வாழ்ந்து
உறவுகள் முகம் மலர்ந்து
.....புதுவாழ்வு வாழ்ந்து
பிரிந்து சென்றீர் எமைவிட்டு
.......கண்ணீர் சிந்த

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.