ஆறுதல்

மரண அறிவித்தல்

சிவகுரு புவனேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவகுரு புவனேந்திரன்

டிஸ்னி உணவக உரிமையாளர்

வயது 732 ஆகஸ்ட், 1946 – 14 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
நாரந்தனை
வாழ்ந்த இடம்
பிரான்ஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு புவனேந்திரன் அவர்கள் 14-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சிவகுரு, கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கார்த்திகேசு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ராஜேஸ்வரி(செல்லம்) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்ற சிவானந்தன், ஜெயந்தி, சுகந்தி, ராஜி, பழனிராஜன்(ராஜன்), யோகானந்தன்(ரவி) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

சிவகணேசன், லோககேஸ்வரன், அருளந்தி(அருள்- சுவிஸ்), கல்யாணி, சர்மிளா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சறோஜினி, விஜயாதேவி(இலங்கை), பரிமளாதேவி(இலங்கை), பாலச்சந்திரன்(ஈழநாடு), சந்திராதேவி(கனடா), நிர்மலாதேவி(தமிழ்நாடு), குணேந்திரன்(யோகன்- பிரான்ஸ்), இந்திராதேவி(பிரான்ஸ்), ரதிதேவி(கலைவாணி- தமிழ்நாடு) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கோமதி, கோபிநாத், சங்கவி, விசாலினி, வைஷ்ணவி, சிவா, தனுஷ், ஓவியா, சாருஜன், ஜீவன், நிதுஷா, நத்தன், சிந்துஜா, ஆதீஷ், அருண் ஹரிணா ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி, பத்மநாதன் மற்றும் சுந்தரலிங்கம், சாந்தலிங்கம், நாகேஸ்வரி, யோககேஸ்வரி, மங்களேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த ஊர்காவத்துறை நாரந்தனையில் 02/AUG/1946 இல் சிவகுரு கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக புவனேந்திரன். அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சறோஜினி, விஜயாதேவி, பரிமளாதேவி, பாலச்சந்திரன், சந்திராதேவி, நிர்மலாதேவி, குணேந்திரன், இந்திராதேவி, ரதிதேவி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், திரு.திருமதி கார்த்திகேசு பொன்னம்மா தம்பதிகளின் அருமை மகள் ராஜேஸ்வரி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து சந்தோசமாக வாழ்ந்து சிவானந்தன், ஜெயந்தி, சுகந்தி, ராஜி, பழனிராஜன், யோகானந்தன் எனும் அழகிய பிள்ளையைப் பெற்று வளர்த்து சிவகணேசன், லோககேஸ்வரன், அருளந்தி, கல்யாணி, சர்மிளா என்பவர்களை திருமணம் முடித்து வைத்து கோமதி, கோபிநாத், சங்கவி, விசாலினி, வைஷ்ணவி, சிவா, தனுஷ், ஓவியா, சாருஜன், ஜீவன், நிதுஷா, நத்தன், சிந்துஜா, ஆதீஷ், அருண் ஹரிணா எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் டிஸ்னி உணவக உரிமையாளராக இருந்து மக்களுக்கு சுவையான உணவுகளை வழங்கி மகிழ்ந்ததுடன் தினசரி செய்தி நாளிதழ்கள் பார்ப்பது அவரின் நாளாந்த கடமையானதுடன், கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 14.09.2019 இல் 73 வயதில் பிரான்ஸில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

“நாரந்தனை தந்த நன்மை விரும்பியே
பாரம் சுமந்த பாச மலரே
சீராக பாதை காட்டிய சிந்தனை உள்ளமே
வாழ்ந்தோம் உம்முடன் போனீர் எமைப் பிரிந்து”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.