மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுரு சிவானந்தம்மா
வயது 7920 மே, 1937 – 30 ஜூலை, 2016
- பிறந்த இடம்
- மட்டுவில் தெற்கு
- வாழ்ந்த இடம்
- மட்டுவில் தெற்கு, வவுனிக்குளம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மட்டுவில் தெற்கு மடத்தடியைப் பிறப்பிடமாகவும், மட்டுவில் தெற்கு மடத்தடி, வவுனிக்குளம் சிவபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சிவகுரு சிவானந்தம்மா அவர்கள் 30-07-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சண்முகம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
சிவகுரு அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற சிவானந்தராசன், நித்தியானந்தராசன்(நித்தி, பபா- கனடா), பாஸ்கரன்(இந்திரன்- கனடா), முரளிதரன்(முரளி- கனடா), அன்பரசி(ரேவதி- இலங்கை) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்றவர்களான குமாரசாமி, யோகலிங்கம், மற்றும் பரமேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
செல்வரத்தினம்(இலங்கை) அவர்களின் அன்பு அண்ணியும்,
விஜயலட்சுமி(விஜி- கனடா), சாந்தநிரஞ்சனா(சாந்தா- கனடா), ஜனா(கனடா), மௌலீஸ்வரன்(மௌலீஸ்- இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பிரசாந்தன், லாவண்யா, தர்மிகா, மிருனா, மிதுஷா, ஜெனிபர், ஜெசிக்கா, ஜேசன் ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,
மைட்ரேயன், சானுகா, தக்சிகா ஆகியோரின் அன்பு அம்மம்மாவும்,
பிரநாத் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

