மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதர் மோகனச்சந்திரன்
முன்னாள் தங்கொட்டுவ வர்த்தகர்
வயது 6722 டிசம்பர், 1948 – 10 பிப்ரவரி, 2016
- பிறந்த இடம்
- காரைநகர் வாரிவளவு
- வாழ்ந்த இடம்
- மல்லாவி, மட்டக்களப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். காரைநகர் வாரிவளவைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு மல்லாவியை வசிப்பிடமாகவும், மட்டக்களப்பு தாமரைக்கேணியை வதிவிடமாகவும் கொண்ட சிவகுருநாதர் மோகனச்சந்திரன் அவர்கள் 10-02-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவகுருநாதர் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மாரிமுத்து, விசாலட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுகந்தினிதேவி(லண்டன்), சுதாகரன்(எட்னா ரேடர்ஸ்- மட்டக்களப்பு), காலஞ்சென்ற சுதர்சன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான மகாதேவன், கனகசுந்தரம், கணேசபிள்ளை, லோகநாதன், மற்றும் புஸ்பவதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பரஞ்சோதி(லண்டன்), தவமணிதேவி(ஆசிரியை- சரஸ்வதி தமிழ் வித்தியாலயம், குருநாகல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பிருந்தன், பவித்ரா, அபிவர்ஷினி, ஹரிகரசுதன் ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 11-02-2016 வியாழக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியவில் கல்வியங்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
1ம் குறுக்கு, சங்கீதா லேன்,
தாமரைக்கேணி,
மட்டக்களப்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

