மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுமார் பொன்னுத்துரை
வயது 575 மே, 1962 – 20 ஜூன், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- பேர்ண்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Bern ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுமார் பொன்னுத்துரை அவர்கள் 20-06-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், பொன்னுத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், விஸ்வலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சந்திரமதி அவர்களின் அன்புக் கணவரும்,
சஜினி, கிவி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அமிதாப் அவர்களின் அன்பு மாமனாரும்,
சுந்தரலிங்கம், பத்மநாதன், தர்மேந்திரன், தர்மகுலசிங்கம், யோகராஜா, ராஜேஷ்வரி, புவனேஷ்வரி, கருணாதேவி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,மக்கள் செறிந்து வாழும் பகுதியும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் அருள்பாலிக்கும் கோவில் சூழ்ந்த இடமும்,நெல்வயல்கள், மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த நல்லூரில் 05/MAY/1962 ஆம் ஆண்டில் திரு.திருமதி பொன்னுத்துரை பாக்கியம்தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.சிவகுமார் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அழகு நிறைந்த இவர் சுந்தலிங்கம், பத்மநாதன், தர்மேந்திரன், தர்மகுலசிங்கம், யோகராஜா, ராஜேஷ்வரி, புவனேஷ்வரி, கருணாதேவி போன்ற சகோதரங்களுடன் வளர்ந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி விஸ்வலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளான சந்திரமதி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து சஜினி, கிவி எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மச்சி, Photo பாலா என ஊரவர்களால் அழைக்கப்படும் இவர் நன்றி உள்ளம் கொண்டவராக விளங்கினார். அத்துடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் வள்ளலும் ஆவார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் மாரடைப்பால் 20.06.2019 இல் 57 வயதில் சுவிஸ்ஸில் உள்ள பேர்ண் நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
நற் தமிழ் நல்லூரில்
சொல்ப் போர் பூமியில்
வில்ப் போர் கந்தன் துணையுடன்
பற்பல சேவை பணிவுடன் ஆற்றி
நிழல் தரும் விருட்சமாய்
நிலைத்தீர் மனதில்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

