மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவகுருநாதன் நாகலிங்கம்
முன்னாள் இ. போ. ச. தொழில்நுட்ப உத்தியோகத்தர் கிளிநொச்சி
வயது 7715 ஜூன், 1941 – 19 மே, 2019
- பிறந்த இடம்
- திருநெல்வேலி
- வாழ்ந்த இடம்
- கனகபுரம், கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், கனடா, கிளிநொச்சி கனகபுரம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகலிங்கம் சிவகுருநாதன் அவர்கள் 19-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று கிளிநொச்சியில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளின் அன்பு மகனும், ஐயம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புஸ்பராணி அவர்களின் அன்புக் கணவரும்,
பாலமுரளி(SBS Automotive Bala), பாலதர்சினி(தர்சினி), பாலச்சந்திரன்(சந்திரன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீலாயதாட்சி, சண்முகலிங்கம், காலஞ்சென்ற தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சறோஜினி, தவராசா(செல்வன், ERAA Super Market), பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான இராஜகதிர்வேல், சாமிநாதர்(அப்பையா), மீனாட்சி, பிலோமினா(மணி) மற்றும் அன்னமலர்(மலர்), திரேசம்மா(சறோ), செல்வநாயகம்(ஜெயம்), நாகம்மா, திரவியமலர்(பவா), லோகேஸ்வரி(சின்னமணி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், நடராசா, பிரான்சிஸ் சேவியர் மற்றும் காமாட்சிப்பிள்ளை, மரியநாயகம், மஞ்சுளா ஆகியோரின் அன்புச் சகலனும்,
சரண், சாருகன், கிரிசன், பவிசன், சிவராஜி, விஸ்ணு ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 21-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை இலக்கம் 117, 11ம் பண்ணை, கனகபுரம், கிளிநொச்சி இல் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும் படித்தவர்களைக் கொண்டதும், பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடமும், நெல்வயல்கள்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த திருநெல்வேலியில்15/JUN/1941 ஆம் ஆண்டு நாகலிங்கம் இராசம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக சிவகுருநாதன் அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் பிறந்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் நீலாயதாட்சி, சண்முகலிங்கம், தியாகராஜா போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் ஐயம்பிள்ளை மரியமுத்து தம்பதிகளின் அன்பு மகள் புஸ்பராணி என்பவரைத் திருமணம் செய்து இன்பமாக வாழ்ந்து பாலமுரளி, பாலதர்சினி, பாலச்சந்திரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் சறோஜினி, தவராசா, பவானி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது மாமாவிற்குரிய கடமையை சிறப்பாக செய்து சரண், சாருகன், கிரிசன், பவிசன், சிவராஜி, விஸ்ணு ஆகிய அற்புத பிள்ளைகளின் பேரனாக கடமை செய்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் இலங்கைப் போக்குவரத்து சபையின் தொழில்நுட்ப உத்தியோகத்தராக கிளிநொச்சியில் கடமையாற்றி ஓய்வு நிலை அடைந்த இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், சகோதரபாசம் நிறைந்தும்,பிள்ளைப்பாசம் கொண்டும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 19.05.2019 இல் 77 வயதில் கிளிநொச்சியில் உள்ள கனகபுரத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"திருநெல்வேலி மண்ணின்
......திறமை நிறைந்தவனே
தித்திப்பான பேச்சால்
.......கவர்ந்த உள்ளமே
அறிவில் சிறந்த
........ அன்பு நிறைந்தவனே
அகிலம் விட்டு
......போனது ஏன்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

