மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவலிங்கம் தங்கவேலாயுதம்
வயது 703 பிப்ரவரி, 1949 – 2 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- திருவையாறு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி திருவையாறை வசிப்பிடமாகவும் கொண்ட சிவலிங்கம் தங்கவேலாயுதம் அவர்கள் 02-11-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சிவலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
இரத்தினம் அவர்களின் அன்புக் கணவரும்,
அருள்குமரன்(அவுஸ்திரேலியா), ரோகினி(லண்டன்), காலஞ்சென்ற குணாளன், நிரோசனா(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சரண்யா(அவுஸ்திரேலியா), தமிழ்செல்வன்(லண்டன்), ரவிசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சுப்பிரமணியம்(பருத்தித்துறை) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
தாருசன், சாயிசன், டனிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 05-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம், வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம், பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த பருத்தித்துறையில் 03/FEB/1949 ஆம் ஆண்டில் திரு.திருமதி சிவலிங்கம் செல்வரத்தினம் தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.தங்கவேலாயுதம் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் சுப்பிரமணியம் எனும் சகோதரருடன் கூடப் பிறந்து பண்பும் நல்லுள்ளமும் கொண்டவராக விளங்கியதுடன், திரு.திருமதி தர்மலிங்கம் புவனேஸ்வரி தம்பதிகளின் அழகிய பெண்ணான இரத்தினம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
சந்தோஷமாக வாழ்ந்து வந்ததன் பயனாக அருள்குமரன், ரோகினி, குணாளன், நிரோசனா எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து பிள்ளைகள் பெரியவர்களானதும் சரண்யா, தமிழ்செல்வன், ரவிசங்கர் போன்றவர்களுக்குத் திருமணம் முடித்து வைத்து தாருசன், சாயிசன், டனிக்கா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் கடின உழைப்பாளியும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தது மட்டுமல்லாது இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 02.11.2019 இல் 70 வயதில் கிளிநொச்சியில் உள்ள திருவையாற்றில் இறையடி எய்தினார்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

