மரண அறிவித்தல்

சிவலோகநாதன் கணபதிப்பிள்ளை
(இளைப்பாறிய களஞ்சிய பொறுப்பாளர் சுன்னாகம் பலநோக்கு கூ. சங்கம்)
வயது 76
பிறந்த இடம்: தெல்லிப்பழைவாழ்ந்த இடம்: வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தெல்லிப்பழை துர்காபுரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சிவலோகநாதன் கணபதிப்பிள்ளை அவர்கள் 01-02-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, பகவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கனகசுந்தரம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
பாமினி, தாரினி, நிலானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற மரகதவல்லி, கமலவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யோகநாதன், கேதீஸ்வரன், ஜெயந்தன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
புவனகாந்தன், புவனதேவி, புவனசந்திரன், சரவணபவன், புவனசோதி, புவனேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இதிகாசன், யாசுகன், ஜெனுதிகா, அபிநயன், ரிதுஷன், டருன், கிவோன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 05-02-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 06:00 மணிவரை கல்கிசை மகிந்த மலர்ச் சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு மறுநாள் 06-02-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 கிரியை நடைபெற்று பின்னர் ந.ப 12:00 மணியளவில் கல்கிசை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

