ஆறுதல்

நன்றி நவிலல்

சிவநாயகி ஜெயபாலன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சிவநாயகி ஜெயபாலன்

முன்னாள் இலங்கை வங்கி, போக்குவரத்து அமைச்சின் பணியாளர்

வயது 7020 டிசம்பர், 1948 – 17 மே, 2019

பிறந்த இடம்
மூளாய்
வாழ்ந்த இடம்
கோண்டாவில், கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

அன்னாரின் இறப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களை பகிர்ந்து கொண்டவர்களுக்கும், தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களை தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியைகளில் கலந்துகொண்டவர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணம் மூளாயில் சபாநாயகம் திருச்செல்வம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக சிவநாயகி அவர்கள் 20/DEC/1948 ஆம் ஆண்டில் இவ் அவனியில் விவேகானந்தன், சிவானந்தன், தெய்வநாயகி எனும் உடன் பிறப்புகளுடன் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் சீவரெத்தினம் அன்னலட்சுமி தம்பதிகளின் அழகு நிறைந்த ஆண் மகனான ஜெயபாலன் என்பவரைத் திருமணம் முடித்து ஆருயிர் மனைவியாக மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்தார்.மேலும் நன்கு படித்து உயர்நிலை அடைந்ததுடன் இலங்கை வங்கியில் சேவையாற்றியதுடன் ஓய்வு நிலையும் அடைந்தார், மேலும் போக்குவரத்து அமைச்சின் பணியாளராகவும் நிறைந்த சேவை வழங்கியதுடன், எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார்.

முழுக் கதையையும் வாசிக்க

மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார்.இவ்வாறு கணவன்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.05.2019 இல் 70 வயதில் கொழும்பில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"மூளாயில் உதிர்த்த
......முழு மதியே
மூச்சாக வாழ்ந்த
......முதல் உயிரே
பேச்சுடன் வாழ்ந்து
......கூடி மகிழ்ந்த
பாச உறவே
......பறந்து போனீரே"

பிற அறிவித்தல்கள்

  1. 18 மே, 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.