மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவராமலிங்கம் டினேஸ்சங்கர்
வயது 2916 டிசம்பர், 1989 – 21 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- வதிரி
- வாழ்ந்த இடம்
- வதிரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரவெட்டி வதிரி தில்லையர்வளவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சிவராமலிங்கம் டினேஸ்சங்கர் அவர்கள் 21-11-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சிவராமலிங்கம் பரிமளா தம்பதிகளின் அன்பு மகனும்,
கௌரிசங்கர்(கனடா), சாளினி(ஆசிரியை), திருசங்கர், சாமினி ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-11-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஆலங்கட்டை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை, உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கரவெட்டி வதிரியில் 16/DEC/1989 ஆம் ஆண்டில் திரு.திருமதி சிவராமலிங்கம் பரிமளா தம்பதிகளுக்கு அழகு மகனாக திரு.டினேஸ்சங்கர் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகு நிறைந்த இவர் கௌரிசங்கர்(கனடா), சாளினி(ஆசிரியை), திருசங்கர், சாமினி எனும் அன்பு உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவனான்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் டினேஸ் என அன்பாக அழைக்கப்படும் இவர் நண்பர்களுடன் தொலைபேசியில் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார்.
இவ்வாறு தந்தை,தாய், சகோதரங்கள், உற்றார், உறவினர்,நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 21.11.2019 இல் 29 வயதில் கரவெட்டியில் உள்ள வதிரியில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்
புது வெள்ளை மலர் ஒன்று
இளமையில் வாடியது
இடிந்தது நம் இதயம்
நேற்று வரை நகைச்சுவை பேசிய உறவு
இன்று மௌனமாக உறங்கியது
நாளைய வெற்றிடம் நமக்கு மட்டுமே புரியும்
இருபத்தி ஒன்பதில் இளம் காளை
இன்புற்று வாழ இறைவன் விடவில்லையே
நெற்றியில் திருநீறும் நேர் பார்வையும்
வெற்றி வீரன் போல் வருவாய் புன்னகையுடன் எதிரில்
ஐயகோ.....எம் ஆருயிர் செல்வம்
அருமை உறவின் பிரிவில்
அழுது புலம்புகிறோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

