மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவசுப்பிரமணியம் லோகநாதன்
முன்னாள் முகாமையாளர்- Industrial Finance Limited Colombo Srilanka
26 ஜூலை, 2018
- பிறந்த இடம்
- உரும்பிராய் கிழக்கு
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராய் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சிவசுப்பிரமணியம் லோகநாதன் அவர்கள் 26-07-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம், தையல்நாயகி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும், காலஞ்சென்ற தம்பிஐயா(உரும்பிராய் தெற்கு), நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற செளமியா குவிதா(முன்னாள் HSBC Staff), கிருஷாணி(அவுஸ்திரேலியா Perth), யஜிந்தா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சிவநாதன், ரவீந்திரநாதன், குருநாதன், கலா, சித்திரா ஆகியோரின் மூத்த சகோதரரும்,
Dr. பரமேஸ்வரன் சிவசுதன், Dr. கிருஷ்ணேஸ்வரன் முகுந்தன், தேவராஜா சண்முகப்பிரியன்(Engineer) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
நடேசன், தியாகராசா, செல்வராஜா, மகேஸ்வரன், ஆனந்தன், இளங்கோவன், லக்சுமிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
அஜந்தன், மாதேஷ், மாதங்கி ஆகியோரின் செல்லப் பாட்டனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொரளை கனத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 21, 32வது ஒழுங்கை,
வெள்ளவத்தை,
கொழும்பு.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

