மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிவயோகம்மா அமிர்தலிங்கம்
வயது 8518 மார்ச், 1931 – 8 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 3ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கனடா, அநுராதபுரம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். புங்குடுதீவு 3ம்வட்டாரம் பெருங்காட்டைப் பிறப்பிடமாகவும், கனடா, அநுராதபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சிவயோகம்மா அமிர்தலிங்கம் அவர்கள் 08-12-2016 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(பிரபல வர்த்தகர் - கமலா பவான், இரத்தினபுரி) அவர்களின் பாசமிகு மனைவியும்,
சண்முகலிங்கம்(அநுராதபுரம்), சந்திரதாஸ்(ஜெர்மனி), கிருஷ்ணகுமார்(கனடா), கோகிலநாதன்(கனடா), நிர்மலா(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற அம்பலவாணர்(அருளையா), மற்றும் நாகலிங்கம், கந்தையா, கிருஷ்ணபிள்ளை, பராசக்தி, பரிமளம், சற்குணம், கனகு, சண்முகவல்லி, கிளி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவயோகம், இராஜேஸ்வரி, பிரேமரஞ்சி, தயாழினி, பவானந்தன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
இராசமணி(பரிஸ்), காலஞ்சென்றவர்களான நமசிவாயம், செல்லம்மா, கார்த்திகேசு, மற்றும் செல்லத்துரை(ஆசிரியர்- கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான அன்னம்மா, நாகலிங்கம், இரத்தினம், மற்றும் சுப்புலட்சுமி(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
அகிலன் அச்னி, அஸ்வினி ஞானகரன், தர்ஷினி சஜீவன், கஜனி, சுதர்ஷ்னி, ரூஹினி, காலஞ்சென்ற சுகாந், மற்றும் நதீனா, சஞ்சனா, தபிசா, கோபி, ரூபிகா, கோபிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஜனுஷ்கா, அபினாஷ், அரன், நேகா, அபிசேகா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-12-2016 சனிக்கிழமை அன்று அவரது மகனின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் அநுராதபுரம் பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

