மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோழங்கர் யோகேஸ்வரன்
வயது 703 ஏப்ரல், 1947 – 26 ஜனவரி, 2018
- பிறந்த இடம்
- வரணி
- வாழ்ந்த இடம்
- வரணி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வரணி மாசேரியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சோழங்கர் யோகேஸ்வரன் அவர்கள் 26-01-2018 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோழங்கர் இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு இலட்சுமிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலக்ஷ்மி(லண்டன்), ஜெயலக்ஷ்மி, செல்வலக்ஷ்மி(அபிவிருத்தி உத்தியோகத்தர், கமநல அபிவிருத்தி திணைக்களம்- வவுனியா), ரமணன்(லண்டன்), தேவசுதன், கேசவன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தனபாலசிங்கம்(லண்டன்), சிவரூபன்(சட்டத்தரணி- சாவகச்சேரி), தயாபரன்(செயலாளர்- நகரசபை, வவுனியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கவின், கவிஷா, ஜெயருக்ஷன், அக்ஷயா, ஆகாஷ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-01-2018 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் பொற்பத்தை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

