ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் சரஸ்வதி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் சரஸ்வதி

வயது 9122 ஜூன், 1927 – 4 ஜூன், 2019

பிறந்த இடம்
கொக்குவில் மேற்கு
வாழ்ந்த இடம்
Saint-Mard

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Saint Mard ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சரஸ்வதி அவர்கள் 04-06-2019 செவ்வாய்கிழமை அன்று பிரான்ஸில் சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் சிவகொழுந்து தம்பதிகளின் ஏக புத்திரியும், காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சோமசுந்தரம்(RMP) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ஸ்ரீபதி, ஸ்ரீரங்கன்(ஜேர்மனி), காலஞ்சென்ற ஸ்ரீகாந்தன், இந்துமதி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

அங்கயற்கண்ணி(ஜேர்மனி), கிருஷ்ணபிள்ளை(மாயவர்- பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

யோகலெட்சுமி(லண்டன்) அவர்களின் பாசமிகு மைத்துனியும்,

துஷ்யந்தன்(அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற ஜனகன், நளாயினி(விஜி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராசா, மகேசன், ஆறுமுகம், திருநாவுக்கரசு, கையிலாயபிள்ளை, தம்பு குலரத்தினம், கந்தையா உத்தரம்(சீவரத்தினம்) ஆகியோரின் கணவர் வழி அன்பு மைத்துனியும்,

மயூரன்-சோபி(பிரான்ஸ்), மகிந்தன்-நிருஜா(பிரான்ஸ்), அபிராமி(பிரான்ஸ்), மதுரா-தக்‌ஷணன்(ஜேர்மனி), தீபன்-ஜஸ்மினா(ஜேர்மனி) அகியோரின் பாசமிகு பேத்தியும்,

அஷ்வின்(பிரான்ஸ்), லக்ஷ்மன்(பிரான்ஸ்), மேஹா(பிரான்ஸ்), மாயா(பிரான்ஸ்), அருண்(ஜேர்மன்), மீரா(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,நெல்வயல்கள்,புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த கொக்குவில் மேற்கில் 22/JUN/1927 ஆம் ஆண்டில் வல்லிபுரம் சிவகொழுந்து தம்பதிகளின் அன்பு மகளாக சரஸ்வதி அவர்கள் சிவசுப்பிரமணியம் எனும் சகோதரருடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் இராமலிங்கம் பொன்னம்மா தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான சோமசுந்தரம்(RMP) என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்து ஸ்ரீபதி, ஸ்ரீரங்கன், ஸ்ரீகாந்தன், இந்துமதி போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்ததுடன் அங்கயற்கண்ணி, கிருஷ்ணபிள்ளை போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து மயூரன்-சோபி, மகிந்தன்-நிருஜா, அபிராமி,மதுரா-கூஷணன், தீபன்-ஜஸ்மினா போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அஷ்வின், லக்‌ஷ்மன், மேஹா, மாயா, அருண், மீரா போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 04.06.2019 இல் 91 வயதில் பிரான்ஸில் உள்ள Saint mard நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"கொக்குவில் தந்த
.......கோ மகளே
பக்கம் இருந்த
.......பாச உறவே
நித்தம் கவலை போக்கி
....... நிம்மதி தந்த
எங்கள் உறவே
.........எங்கே போனீர்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.