ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா

பொறியியலாளர்

வயது 6931 அக்டோபர், 1949 – 13 ஜூலை, 2019

பிறந்த இடம்
மருதனாமடம்
வாழ்ந்த இடம்
மானிப்பாய்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மருதனாமடத்தைப் பிறப்பிடமாகவும், மானிப்பாயை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சிறீஸ்கந்தராஜா அவர்கள் 13-07-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற காசிநாதர், பாக்கியரட்ணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சாந்தகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,

சில்வியா, சிறில்ஜா, சயான் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

அச்சுதன் அவர்களின் அன்பு மாமனாரும்,

சுந்தரராஜா(இலங்கை), காலஞ்சென்ற கிருஸ்ணராஜா, சண்முகராஜா(இலங்கை), கமலாதேவி(சுவிஸ்), சுவர்ணலதா(இலங்கை), பவானி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

நிர்மலாதேவி(இலங்கை), காலஞ்சென்ற ராஜாலட்சுமி, ராஜஅம்பிகை(இலங்கை), கணேசலிங்கம்(சுவிஸ்), சிறிமுருகானந்தம்(இலங்கை), கணேசலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சற்குணகுமார் அவர்களின் அன்பு மைத்துனரும்,

சற்குணநாதன் அவர்களின் அன்புச் சகலனும்,

ஒஸ்ரிலின் அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 18-07-2019 வியாழக்கிழமை அன்று மானிப்பாயில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ். மருதனாமடத்தில் புகழ் பூத்த சீமான் திரு.சோமசுந்தரம் அவர்தம் பாரியார் நல்லம்மா அவர்களின் அருமைப் புத்திரனாக 31/OCT/1949 ஆம் ஆண்டில் திரு.சிறீஸ்கந்தராஜா அவர்கள் சுந்தரராஜா, கிருஸ்ணராஜா, சண்முகராஜா, கமலாதேவி, சுவர்ணலதா, பவானி எனும் அன்பு உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தன் தந்தையுடன் சேர்ந்து சொந்தத் தொழிலில் ஈடுபட்டார் மேலும் திரு.திருமதி காசிநாதர் பாக்கியரட்ணம் தம்பதிகளின் அன்பு மகள் சாந்தகுமாரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சில்வியா, சிறில்ஜா, சயான் போன்ற அழகுப் பிள்ளையைப் பெற்று வளர்த்து அச்சுதன் என்பவரைத் திருமணம் முடித்து வைத்து ஒஸ்ரிலின் எனும் பேரப்பிள்ளையுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் பொறியியலாளராக கடமையாற்றியது மட்டுமல்லாது சமாதான நீதவானாகவும் விளங்கிய இவர் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன், நல்லுள்ளம் நிறைந்தவராக விளங்கியதுடன் சகோதரபாசம் கொண்டும் விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளை, நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 13.07.2019 இல் 69 வயதில் மானிப்பாயில் இறைபதம் அடைந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"அறிவில் சிறந்த
......அன்புத் தெய்வமே
நெறி தவறாது வாழ்ந்த
......நேர்மை உறவே
தறி கெட்ட மனிதரில்
..... தயவுடன் வாழ்ந்து
பறி போனதே உங்கள்
.....பாச உயிர்"

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.