நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் நகுலேஸ்வரன்
வயது 478 மே, 1962 – 4 அக்டோபர், 2009
- பிறந்த இடம்
- கல்வியங்காடு
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும் சுவிஸில் முன்னர் BADEN நகரிலும், பின்னர் BASEL நகரிலும் வாழ்ந்துவந்து கடந்த 04.10.2009 அன்று அமரரான சோமசுந்தரம் நகுலேஸ்வரன் அவர்களின் 43ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும்...
நிலையில்லா இவ்வுலகில்
நிலைத்திருக்கும் உன் உறவால்
நினைவிழக்க மாட்டாமல்
நீந்துகின்றோம் கண்ணீரில்
மரமிருக்கும் நாள்வரையில்
நிழலிருக்கும் பூமியிது
நாமிருக்கும் நாள்வரையீல்
நீர் இருப்பீர் மனத்திரையில்
ஓம் சாந்தி.. ஓம் சாந்தி.. ஓம் சாந்தி
சகோதரனை இழந்து ஆறாத்துயரில் ஆழ்ந்திருக்கும் எங்களிற்கும், சுற்றத்தாருக்கும் நாலா திசைகளிலிருந்தும் துயர் துடைக்கவென ஆயிரமாய் கரங்கள் நீண்டன. நீட்டிய கரங்கள் நம்மை முழுமையாக ஆட்படுத்திய ஆறாத்துயரிலிருந்து நாம் சிறிதாகவேனும் மீண்டுவர உதவியது. மேலும் உங்கள் அருகாமையும் ஆறுதலுமே பெரிதும் உதவின. உங்கள் ஒவ்வொருவரினதும் கரம் பற்றி நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம்.
வீடுதேடி வந்து வேதனையை நீவி விட்டோருக்கும், அவ்வப்போது ஆறுதலாய் வந்துபோனவர்களுக்கும், அழுதழுது குரல் வற்றி வாடிய போதெல்லாம் குடல் வற்றிப்போகாது அமுதுகொண்டு வந்தோருக்கும், தூரதேசங்களிலிருந்தும் தாயகத்திலிருந்தும் உள்நாட்டிலிருந்தும் சிரமம் பாராது தொலைபேசியில் ஆறுதல்வார்த்தைகள் உதிர்த்தோருக்கும் மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்த அனைத்து அன்புள்ளங்களுக்கும், கண்ணீர் அஞ்சலி துண்டுப் பிரசுரம் வெளியிட்டோருக்கும், சகோதரனின் இறுதிரிக்கிரியைகளில் கலந்துகொண்டோர்களுக்கும் எமது இல்லம் தேடிவந்து வலதுகரமாக நின்று வேண்டிய உதவிகளை மேற்கொண்டவர்களுக்கும், மலர்வளையம், மலர் அஞ்சலி, கண்ணீர் அஞ்சலி செலுத்திய அனைத்து அன்புள்ளங்களுக்கும், இறுதிக்கிரியைகளின் முடிவில் குளிர்பானங்கள் சுடுபானங்கள் மற்றும் தொலைவில் இருந்து வந்தவர்களுக்கு மதிய போசன ஏற்பாடு செய்த நண்பர்களுக்கும், மதியபோசனம் நடைபெறுவதற்கு மண்டபம் தந்துதவிய தமிழ்மன்றத்தினருக்கும், மற்றும் பல்வேறு வழிகளிலும் உதவிசெய்த அனைவருக்கும், மற்றும் நாங்கள் அறியாமல் எங்களுக்குத் தெரியாமல் உதவிகள் செய்த அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
சகோதரனின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக்கொண்டும், கீழ்வரும் முகவரியில் 15.11.2009 ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் நடைபெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும் மதியபோசனத்திலும் கலந்துகொள்ளுமாறு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
QUARTIERTREFFPUNKT LOLA
LOTHRINGER STR-63
CH-4056- BASEL
SWITZERLAND
(Basel புகையிரத நிலையத்திலிருந்து 1ம் இலக்க Tram மூலம் Volta Platz தரிப்பிடத்தில் இருந்து 3 நிமிட நடைதூரம்)
நன்றிகள்
— சகோதரன் - சோ. விக்கினேஸ்வரன் (நேசன் குடும்பம்), உறவினர்கள், நண்பர்கள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

