மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் சர்வேஸ்வரன்
ஓய்வு பெற்ற இலங்கை- ஓமான் கடற்படைப் பொறியியலாளர்
வயது 7028 ஜூன், 1948 – 5 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- கரம்பன்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கரம்பனைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் சர்வேஸ்வரன் அவர்கள் 05-04-2019 வெள்ளிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் மகேஷ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பெரியநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வாகீஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஸ்தூரி அவர்களின் அன்புத் தந்தையும்,
மகாதேவி, காலஞ்சென்றவர்களான ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபாநாதன், காலஞ்சென்ற மங்கலிகா, வாமகேசி மனோகரன், பிரியதர்ஷனன், வாகீஷன், நிருத்தியா வர்மா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 07-04-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 02:30 மணியளவில் கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் நடைப்பெற்று பின்னர் கல்கிசை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும் நெல்வயல், வெங்காய வயல், தெங்கு தோட்டம், பழமரங்கள் என்பதுடன் படித்த சமூகத்தை கொண்டதுமான கரம்பனில் 28-06-1948 இல் சோமசுந்தரம் மகேஷ்வரி தம்பதிகளுக்கு அருமைப் புதல்வனாய் சர்வேஸ்வரன் அவர்கள் மகாதேவி, ஞானதேவி, பரமேஸ்வரன் ஆகிய உடன் பிறப்புகளுடன் அவதரித்தார்.
மேலும் ஆழுமையும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து உயர் நிலை அடைந்தது அழகிய வாலிபனானதும் செல்லத்துரை பெரியநாயகி தம்பதிகளின் அறிவு மகள் வாகீஸ்வரி அவர்களை திருமணம் முடித்து இன்பமாகவும் இனிமையாகவும் வாழ்ந்து கஸ்தூரி எனும் அன்பு நிறைந்த பெண் பிள்ளையை பெற்றெடுத்து பாசமாக பாதுகாத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் கல்வியில் உயர்வு நிலை அடைந்ததுடன் கொழும்பில் தற்காலிகமாக வாழ்க்கையை வாழ்ந்ததுடன் இலங்கை ஓமான் கடற்படைப் பொறியியலாளராகவும் பல வருடங்கள் சேவையாற்றி ஓய்வு நிலை பெற்றவர். வாழ்வில் பண்பும் இரக்க குணமும் நிறைந்த இவர் உதவிடும் வள்ளலாகவும் விளங்கினார்.
இவ்வாறு மனைவி பிள்ளை என இறுதிவரை மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05-04-2019 இல் 70 வயதில் கொழும்பில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
"கல்விச் சிகரமே
கலங்கரை விளக்கே
கரம்பன் மைந்தன்
கடலோடி உறவே
ஓய்வின்றி உழைத்த
ஓமான் பாதைகாட்டியே
உன் புகழ் பாடி
உள்ளம் உருகுகிறோம்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

