மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சோமசுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜா
ஓய்வுபெற்ற தபால் அதிபர்
வயது 7527 மார்ச், 1942 – 6 செப்டம்பர், 2017
- பிறந்த இடம்
- Anaipanthy
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட சோமசுந்தரம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 06-09-2017 புதன்கிழமை அன்று கொழும்பில் இறையடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கிருஷ்ணபிள்ளை, இரத்தினேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற கிருஷ்ணகுமாரி அவர்களின் அன்புக் கணவரும்,
சுமங்கலா நிமலன்(லண்டன்), கவிதா சுரேஷன்(லண்டன்), திரிபுவனி யாதவன்(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
ஶ்ரீதரன்(இலங்கை), ஶ்ரீரஞ்சன்(இலங்கை), காலஞ்சென்ற ஶ்ரீநாதன், புவனேந்திரன்(இலங்கை), சந்திராதேவி சொக்கலிங்கம்(இலங்கை), காலஞ்சென்ற கருணானந்தன், ஜெயசிறி(பிரான்ஸ்), விமலாதேவி பத்மநாதன்(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கிருஷ்ணராணி, ரகுநாதன், கிருஷ்ணஜோதி, சோதிராஜன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
மாதுமை(லண்டன்), அபிஷேக்(லண்டன்), ஆருஷன்(லண்டன்), சாத்விகா(லண்டன்), வருணி(கனடா), அபிநயன்(கனடா) ஆகியோரின் அன்புப் பாட்டனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 10-09-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை Mahinda Funeral Parlour 591, Galle Road, Dehiwala- Mount Lavinia, Colombo என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, பின்னர் பி.ப 03:00 மணிமுதல் 05:00 மணிவரை அதே முகவரியில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

