ஆறுதல்

மரண அறிவித்தல்

சோமு முருகுப்பிள்ளை அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சோமு முருகுப்பிள்ளை

Formerly Worked as Nurse at Jaffna Hospital & Uk

வயது 8216 அக்டோபர், 1936 – 1 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
புலோலி தெற்கு
வாழ்ந்த இடம்
புலோலி மேற்கு, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். பருத்தித்துறை புலோலி தெற்கு குரும்பைகட்டியைப் பிறப்பிடமாகவும், "ஈஸ்வரி வாசா" புலோலி மேற்கு தம்பசிட்டி வீதி, லண்டன் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சோமு முருகுப்பிள்ளை அவர்கள் 01-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சோமு கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா நாகமுத்து தம்பதிகளின் ஆசை மருமகனும்,

காலஞ்சென்ற மகேஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

லண்டனைச் சேர்ந்த மனோறஞ்சினி(றஞ்சி), சச்சிதானந்தன்(ஆனந்தன்), கலைவாணி(வாணி), Dr. ஜெயரூபன்(ரூபன்), ஜெயரூபி(ரூபி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

லண்டனைச் சேர்ந்த காலஞ்சென்ற சுரேந்திரராஜ்(சுரேன்), துஷித்தா, செல்வரஞ்ஜன்(ரஞ்ஜன்), Dr. பன்னா, விமலன்(விமல்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற அருணகிரி(GM- புலோலி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம்) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான இராசேந்திரம், பொன்னம்மா மற்றும் வேலும்மயிலும்(லண்டன்), காலஞ்சென்ற மகேந்திரன், சபாரட்ணம்(ஜெர்மனி), நாராயணசாமி(இலங்கை), உதயமூர்த்தி(நோர்வே) அன்பு ஆகியோரின் மைத்துனரும்,

Dr. நீலன், றோஜன், பிரணவி, கிருஷன், காலஞ்சென்ற ஸிவராம், ஸுபன், ஸங்கமி, மலைக்கா, அஸ்வின், சச்சின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் புலோலி தெற்கில் புகழ் பூத்த சீமான் திரு.சோமு அவர்தம் பாரியார் கதிராசிப்பிள்ளை அவர்களின் அன்பு மகனாக 16/OCT/1936 ஆம் ஆண்டில் திரு.முருகுப்பிள்ளை அவர்கள் அருணகிரி எனும் உடன்பிறப்புடன் இவ் அழகிய பூமியில் அவதரித்தார்.

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர் திரு.திருமதி கந்தையா நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகளான மகேஸ்வரி அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக மனோறஞ்சினி, சச்சிதானந்தன், கலைவாணி, Dr ஜெயரூபன், ஜெயரூபி போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து சுரேந்திரராஜ், துஷித்தா, செல்வரஞ்ஜன், Dr பன்னா, விமலன் போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து Dr நீலன், றோஜன், பிரணவி, கிருஷன், ஸிவராம், ஸீபன், ஸங்கமி, மலைக்கா, அஸ்வின், சச்சின் எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் Formerly worked as Nurse at Jaffna Hospital & uk இல் சேவை செய்ததுடன் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 01.09.2019 இல் 82 வயதில் பிரித்தானியாவில் உள்ள London நகரில் இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

சேவையே வாழ்வு என்று
செயற்பட்ட உறவே
பாவைக் குணம் கொண்டு
பாகைவரை மாற்றி
நாவை அடக்கி
நல்லதை மனம் கோணாது ஆற்றி
சாவைத் தழுவினீரே.

பிற அறிவித்தல்கள்

  1. 1 அக்டோபர், 2019நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.