மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூரியகுமார் வேலுப்பிள்ளை
கதிர் டிராவல்ஸ்
வயது 572 ஏப்ரல், 1959 – 25 ஜூன், 2016
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- Chennai
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை ஓரங்கட்டையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வதிவிடமாகவும் கொண்ட சூரியகுமார் வேலுப்பிள்ளை அவர்கள் 25-06-2016 சனிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், சுந்தரேசன், காலஞ்சென்ற பாலேந்திரராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கவிதா அவர்களின் ஆசைக் கணவரும்,
சந்தியா அவர்களின் பாசமிகு தந்தையும்,
கோமதி, காலஞ்சென்ற கதிர்காமலிங்கம், ரஞ்சித கெளரி, காலஞ்சென்றவர்களான யோகசுந்தரம்(மணி), தர்மகுலசிங்கம்(குட்டி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புவனேஸ்வரி, காலஞ்சென்ற சிவநாதன் ஆகியோரின் அன்பு மச்சானும்,
சிவகெளரி வெங்கட்சுந்தர், மோகனரஞ்சன் டீனா, கெளரீசன் அபிராமி, பிரதீபன் ஆகியோரின் ஆசை மாமாவும்,
வசுந்தரா, சந்திரசேகர், அனிதா ஆகியோரின் அன்பு அத்தானும்,
ஜீவச்சந்திரன், பகீரதன் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மரியா அவர்களின் உடன்பிறவாச் சகோதரரும்,
ராகுலன், விக்னேஷ், வசீகரன், சஞ்சீவ், சஹானா, சந்தோஷ் ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
அஞ்சலா, மைக்கேல் ஆகியோரின் அன்பு மாமாவும்,
அனிருத், ரோகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-06-2016 வியாழக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:30 மணியளவில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

