ஆறுதல்

மரண அறிவித்தல்

சூசைமுத்து ஜோசப் ஞானராஜா அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சூசைமுத்து ஜோசப் ஞானராஜா

பிரபல வர்த்தக தொழில் அதிபர்

வயது 6525 ஆகஸ்ட், 1950 – 4 மே, 2016

பிறந்த இடம்
முல்லைத்தீவு
வாழ்ந்த இடம்
கொழும்பு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

முல்லைத்தீவைப் பிறப்பிடமாகவும், புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சூசைமுத்து ஜோசப் ஞானராஜா அவர்கள் 04-05-2016 புதன்கிழமை அன்று கனடா Brampton இல் இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சூசைமுத்து றோசம்மா தம்பதிகளின் கனிஸ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான ஆசீர்வாதம் இராக்கினி தம்பதிகளின் அருமை மூத்த மருமகனும்,

மேரி றோகினி அவர்களின் பாசமிகு கணவரும்,

வினோத்ராஜ்(லண்டன்), றொசானி(கனடா), மிதுர்ஷன்(கொழும்பு) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

அல்பிரட் ஞானராஜா(மொன்றியல்), ஜோசப்பின்(லீலா- ரொறன்ரோ), மறிஸ்ரெலா(ஜெனோவா- ரொறன்ரோ), மேரி மெற்றில்டா(நேசமணி- ரொறன்ரோ), புனிதசீலி(ராணி- மன்னார்), சிசிலியா(செல்வமணி- ரொறன்ரோ), ஜெயமணி(ஜெயா- மன்னார்), பற்றிக் ஞானராஜா(பாஸ்கரன்- சுவிஸ்), ஜான்சி(றாஜி- ரொறன்ரோ) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,

ஜெகநாதன்(கனடா), லக்சனா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தக்‌ஷன்யா, தக்‌ஷியா, யாசினி ஆகியோரின் அருமைப் பேரனும்,

மேரி, நவாப்ராஜா, செல்வநாயகம், பூபாலராஜா, காலஞ்சென்ற இரட்ணதுரை, பாரதிதாசன், கணேசலிங்கம், சுகந்தினி, விஜயரத்தினம், ஜேம்ஸ் றஞ்ஞன்(முருங்கன்), பற்றீசியா றஞ்ஜினி(மாதகல்), லூக் நிர்மலன்(லண்டன்), காலஞ்சென்ற வின்சென்சியா ஜெறோசா, மற்றில்டா மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ரஞ்சினி, இருதயநாதர், லோகேஸ்வரி, உமாமகேஸ்வரன், கிறிஸ்துராஜா ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

அன்னாரின் திருவுடல் 18-05-2016 புதன்கிழமை அன்று கொழும்பு இல்லத்தில் மு.ப 07.00 மணி முதல் பி.ப 05:00 மணி வரையும், 19-05-2016 வியாழக்கிழமை அன்று முல்லைத்தீவு இல்லத்தில் மு.ப 07:00 மணி முதல் பி.ப 03:00 மணி வரையும் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, பின்னர் மாலை முல்லைத்தீவு புனித பேதுரு தேவாலயத்தில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கொழும்பு முகவரி:
62/2, மயூரா ப்ளேஸ்,
வெள்ளவத்தை,
கொழும்பு.

முல்லைத்தீவு முகவரி:
17, சிவஜோதி வீதி,
முல்லைத்தீவு.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.