நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சூசைப்பிள்ளை அன்னம்மா
வயது 8524 ஏப்ரல், 1934 – 13 டிசம்பர், 2019
- பிறந்த இடம்
- Passaiyoor
- வாழ்ந்த இடம்
- பரிஸ், Laval
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பாஷையூரைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வதிவிடமாகவும், கனடா Laval ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சூசைப்பிள்ளை அன்னம்மா அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
ஈழமணித் திருநாட்டில் வடக்கே அமைந்த தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்தில் அருகில் உள்ளதும் கடலுணவு நிறைந்து காணப்படும் இடமான பாஷையூரில் 24/APR/1934 இல் திரு.திருமதி கபிரியேல்பிள்ளை, விறிசித்தம்மா தம்பதிகளின் அன்பு மகள் அன்னம்மா அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் யோசெப் எனும் உடன்பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குருசுமுத்து தம்பதிகளின் மகன் சூசைப்பிள்ளை எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.இவர்களின் வாழ்க்கைப் பயனாக யேசுதாஸ், சூசைதாஸ், மரிஸ்ரெலா, பிரான்சிஸ்,கமிலஸ் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர்
முழுக் கதையையும் வாசிக்க
பிள்ளைகள் பெரியவர்களாகியதும் லொரின்டா, அருந்ததி, டானியேல்,கரோலின் ஜாங்கிலி, நிலாந்தி, லக்சினி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து ரூபன், ரொனி, தீபன், சுஜந், ஸ்ரெவ்வியா, டனி, டனிலா, டெனி, டனிஸ்ரன், டனிஸ்ரா, கபிரியேலா, சந்திரின், ஒலிவியா, கெவின், பிறையன், அன்றூ எனும் பேரப்பிள்ளையுடனும், ஆதவன் கபிரியேல், டேவிட், டிஷான், டிவினா, ஏஞ்சல், அபிஷா, றியானா, சீயோன், ஏலோன் போன்ற பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் பிரான்ஸில் பலகாலம் வாழ்ந்ததுடன் பின்னர் கனடாவில் வாழ்ந்த இவர் பேரப்பிள்ளைகளுடனும்,பூட்டப்பிள்ளைகளையும் தூக்கி முத்தமிட்டு வளர்ப்பதில் பொழுதைப் போக்கியதுடன், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள், உற்றார்,உறவினர், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 13.12.2019 இல் 85 வயதில் கனடாவில் உள்ள laval நகரில் கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னையே அன்பின் வண்ணமே
நின்னையே தினம் தினம் தொழுதோம்
எண்ணமோ உயரிய சிந்தனை உள்ளமே
அன்னையாக எம்மை அணைத்து வளர்த்ததுடன்
பாசம் அள்ளிப் பொழிந்த பாட்டியே
பண்பில் உயர்ந்த பூட்டியே
உங்கள் திருமுகம் கான தினமும் தவிப்போம் ஐயமில்லை.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

