நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சொரூபன் சுருதியன்
வயது 413 மார்ச், 2005 – 13 மே, 2009
- பிறந்த இடம்
- விசுவமடு
- வாழ்ந்த இடம்
- விசுவமடு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு விசுவமடுவைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சொரூபன் சுருதியன் அவர்களின் 11ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீ பிறந்த நாள் முதலாய்
கண்கலங்க விட்டதில்லை- இன்று
காலனுடன் சென்று எங்களை
கலங்க வைத்தாயே!
உன் சிரிப்பை நாம் ரசித்த போதெல்லாம்
தெரியவில்லை எம் மொத்தச் சிரிப்பையும்
நீ எடுத்துச் செல்வாய் என்று!
என் செய்வேன் எம் செல்லமே
தேடுகின்றோம் எம் பிள்ளை போன திசை
எது என்று தெரியாது?
எங்கும் நீ நிறைந்தாய்
எதிலும் நீயே நிறைந்தாய்
எங்களில் கண் - நீர் நிறைத்து
நிஜத்தில் ஏன் மறைந்தாய்?
உதிர்ந்து நீ போனாலும்
உருக்கும் உன் நினைவுகள் - எம்
உள்ளத்தில் என்றென்றும் உறைந்திருக்கும்
சுருதிக்குட்டியே!
என்றும் உன் நினைவகளை நெஞ்சில் சுமக்கும்
குடும்பத்தினர்.
இதே நாளில் எம் செல்வத்தோடு விவேகன் குட்டி, நளாயினி,
**தமிழவள், சிவசோதியக்கா ஆகியோரையும் நினைவுகூறுகின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

