நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சௌந்தர்ராஜன் அன்னபூசனி
வயது 6511 பிப்ரவரி, 1954 – 14 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- திருகோணமலை
- வாழ்ந்த இடம்
- நெதர்லாந்து
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதிருகோணமலையைப் பிறப்பிடமாகவும், நெதர்லாந்தை வதிவிடமாகவும் கொண்ட சௌந்தர்ராஜன் அன்னபூசனி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!
உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை
உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..
உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!
எங்கள் தாயாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர்கள், நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும் மற்றும் இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் வீட்டுக்கிருத்திய கிரியை 14-12-2019 சனிக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
இயற்கை அழகு நிறைந்த இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவப் பாரம்பரியம் தழைத்தோங்கிய பொன் பூமியான திருகோணமலையில் 11/FEB/1954 இல் திரு.திருமதி கந்தசாமி அன்னபூரணம் தம்பதிகளுக்கு அன்பு மகளாக அன்னபூசனி அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் சண்முகபாலன், பாலசரோஜினாதேவி,விஜயலஸ்மி மற்றும் கமலேஸ்வரி, அம்பிகைபாலன், சந்திரகலா, ரகுபாலன் எனும் சகோதரங்களுடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு திருமதி தம்பிராஜா சௌந்தரம் தம்பதிகளின் அழகு மகன் சௌந்தர்ராஜன்(ராசா) எனும் அன்புள்ளம் கொண்டவரை திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர்களின் வாழ்க்கைப் பயனாக திசோக்காந்தன்(திசோ), திசாந்தினி எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்தனர் பிள்ளைகள் பெரியவர்கள் ஆனதும் தயாநந்தினி(தயானி), சரவணகுமார்(சரவணா) என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து அபிஸ்ணா, தனுஸ்கா, கோஷிதா, அகன்யா, அக்ஷரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் றதி என அழைக்கப்படும் இவர் வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும், அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 14.11.2019 இல் 65 வயதில் நெதர்லாந்தில் இயற்கை மரணம் அடைந்தார்.
திருமலை தந்த திருமகளே
அருமை உறவே அன்பின் கொடையே
வரும் போது புன்னகை ததும்ப
எதிர்ப் படுவீரே எங்கள் அன்னையே
இப்போ எமை விட்டு எங்கே போனீர்
தவிக்கிறோம் தாயே
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

