ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீமத் கணேசானந்த மகாதேவ சுவாமிகள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீமத் கணேசானந்த மகாதேவ சுவாமிகள்

ஒப்புரவாளர்

24 ஆகஸ்ட், 2017

பிறந்த இடம்
சாவகச்சேரி
வாழ்ந்த இடம்
கிளிநொச்சி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். சாவகச்சேரி பெரியமாவடியைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமத் கணேசானந்த மகாதேவ சுவாமிகள் அவர்கள் 24-08-2017 வியாழக்கிழமை அன்று மகாசமாதி அடைந்தார்.

அன்னார், சாவகச்சேரி பெரியமாவடியைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான பரமு நாகமுத்து தம்பதிகளின் அன்புப் புதல்வர் ஆவார்.

இவர் கிளிநொச்சி ஜெயந்திநகர் மகாதேவ ஆச்சிரம தவத்திருவடிவேல் சுவாமிகளின் சிஷ்யரும், ஆச்சிரம தற்போதய குருபீடாதிபதியும் தலைவரும் ஆவார்.

சுவாமிகள் கிளிநொச்சி நகரின் பிரதான ஆலயங்களின் புனருத்தாரணத்திற்கும், வளர்ச்சிக்கும், சமய பண்பாட்டு விழுமியங்களைச் சமூகத்தில் வளர்த்தெடுப்பதற்கும் பெரும் பணியாற்றியுள்ளார். மேலும் இரணைமடு கனகாம்பிகை அம்மன் ஆலய போசகரும், உருத்திரபுரம் சிவன் ஆலய போசகரும், முன்னாள் தலைவரும், பொறிக்கடவை அம்மன் ஆலய போசகரும், கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் ஆலோசகரும், முருகண்டீஸ்வரர் ஆலய ஆலோசகரும், திருநெறிக்கழக முன்னாள் தலைவரும் ஆவார்.

அன்னாரின் சமாதி பிரதிஷ்டை 25-08-2017 வெள்ளிக்கிழமை அன்று மகாதேவ ஆச்சிரமத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.