நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
ஸ்ரீமதி கமலாதேவி சுப்பிரமணிய சாஸ்திரிகள்
வயது 8110 அக்டோபர், 1937 – 7 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- நல்லூர்
- வாழ்ந்த இடம்
- நீராவியடி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கைலாசப்பிள்ளையார் கோவிலடியில் 10/OCT/1937 இல், குருசாமிக்குருக்கள் சீதாலஷ்மி தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியாக ஸ்ரீமதி கமலாதேவி அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திருச்சி லால்குடியைச் சேர்ந்த, சுப்பிரமண்ய சாஸ்திரிகளை திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டு, சுவையான உணவுகள் செய்வதில் கைதேர்ந்தவராக விளங்கினார்.
இவ்வாறு உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 81 வயதில் இறைபதம் அடைந்தார்.
”பாசத்தின் பிறப்பிடமே
கருணையின் ஊற்றே
எங்கள் மனதில்
உங்கள் முகம்
எந்நாளும் உயிர் வாழும்”
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

