ஆறுதல்

மரண அறிவித்தல்

ஸ்ரீமதி இராஜேஸ்வரி அம்மா சிதம்பரநாதக் குருக்கள் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

ஸ்ரீமதி இராஜேஸ்வரி அம்மா சிதம்பரநாதக் குருக்கள்

வயது 7823 ஜனவரி, 1938 – 28 ஜூலை, 2016

பிறந்த இடம்
மட்டுவில்
வாழ்ந்த இடம்
சாவகச்சேரி

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மட்டுவிலைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கல்வயலை வசிப்பிடமாகவும் கொண்ட ஸ்ரீமதி இராஜேஸ்வரி அம்மா சிதம்பரநாதக் குருக்கள் அவர்கள் 28-07-2016 வியாழக்கிழமை அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், மட்டுவிலை சேர்ந்த காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமிக் குருக்கள் இரத்தினம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சிதம்பர ஐயர் ஜானகி அம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சிவஸ்ரீ சிதம்பரநாதக் குருக்கள்(திருக்கணித பஞ்சாங்கக் கணிதர் கலாபூஷணம்) அவர்களின் அன்பு மனைவியும்,

பிரம்மஸ்ரீ ஜெகதீஸ்வர சர்மா(திருக்கணித ஜோதிடம்- கொழும்பு), பிரம்மஸ்ரீ சண்முகானந்த சர்மா(இளைப்பாறிய ஆசிரியர்), காலஞ்சென்ற சியாமளா, மனோகரி சபாநாதக் குருக்கள்(ஜெர்மனி), பிரம்மஸ்ரீ ஸ்ரீதர சர்மா(முன்னாள் விரிவுரையாளர் யாழ்/பல்கலைக்கழகம், ஐக்கிய அமெரிக்கா), சிவஸ்ரீ கிருபாகரக் குருக்கள்(பிரதமகுரு, சரசாலை- வீரமாகாளியம்மன் கோவில்), பிரம்மஸ்ரீ வாகீஸ்வர சர்மா(Achievers Marketing Pvt Ltd, Colombo), பிரம்மஸ்ரீ குமரேஸ்வர சர்மா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்ற லோகேஸ்வரி சண்முகராஜ ஐயர், பிரதிஷ்டா வித்தகர் சிவஸ்ரீ சோமசுந்தரக் குருக்கள், சமஸ்கிருத பண்டிதர் சிவஸ்ரீ சதாசிவக் குருக்கள், லோகநாயகி விஸ்வநாத சர்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

வாசுகி, கமலா, சபாநாதக் குருக்கள்(ஜெர்மனி), கவிதா(ஐக்கிய அமெரிக்கா), கெளரீஸ்வரி, ஷாலினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

திவ்யா கலாரூபன், விசாகன், பார்கவி சுப்பிரமணிய ஜனகன், நிகேதன், சாம்பவி, ஹானவி, செளஜன்யா, செளந்தர்யா, சாசனா, சுதர்சன், ஹம்சிகா, சுகிர்தன், வைஷாலி ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

ஹரித்திரா, ஆர்த்திரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-07-2016 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டுமுகவரி:
சியாமளா பவனம்,
கல்வயல்,
சாவகச்சேரி,
யாழ்ப்பாணம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.