நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சிறிரஞ்சன் இந்திரலிங்கம்
வயது 5026 மார்ச், 1967 – 9 மே, 2017
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- கனடா
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த சிறிரஞ்சன் இந்திரலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
மண்ணினில் மகிழ்ந்து
மாண்புடன் வாழ்ந்த சிறிரஞ்சன்
விண்ணிலே விடையேறிய
பரமன் பாதம் பணிந்து - இறையாகி
கண்ணினால் இவ்வுலக காட்சிகள்
அனைத்தும் காண்கிறான்!
வெந்த புண்ணிலே வேல் பாய்ந்த
உணர்வோடு நிற்கின்றோம் - அவர் பிரிவால்
பண்ணிசைத் தேவார பதிகம் பாடித்துதித்து
நினைவுகள் சுமந்த கண்ணீரை
பூக்களாய் தூவித் தூவி காணிக்கை செய்கின்றோம்!
ஓம்சாந்தி! ஓம்சாந்தி!! ஓம்சாந்தி!!!
அன்னாரின் இழப்புச் செய்தி கேட்டு உடனே வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களுக்கும், வேதம் ஓதிய அந்தணர்களுக்கும், கிரியைகளை சிறப்புடன் நிகழ்த்திய குருமார்களுக்கும், பல நாடுகளிலிருந்தும் தொலைபேசி மூலம் ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மேலும் பல உதவிகளை எமக்கு செய்தவர்களுக்கும், வேறு பல நாடுகளில் இருந்து சிரமங்களை பாராது வந்து எங்கள் துயரத்தில் கலந்து கொண்ட அன்பு உள்ளங்களுக்கும், கடைசிவரை எம்முடன் இருந்து துயரத்தில் பங்கு கொண்ட உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக் கிரியை எதிர்வரும் 08-06-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் No: 76 Tomabrook Cres, Brampton, L6R OV4, Canada எனும் முகவரியில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெற இருப்பதால் அத்தருணம் தாங்களும் வருகை தந்து அவரது ஆத்ம சாந்திக்குப் பிராத்திப்பதுடன், தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் பங்குகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

