நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் லோகநாதன்
கலாபூசணம், கலைச்சூரியர், கலைவளிதி, சமாதான நீதிவான், ஓய்வுபெற்ற முன்னாள் உத்தியோகத்தர்- யாழ் மாநகரசபை, நாடகக் கலைஞர், கேசாவில் முத்துவிநாயகர் நிர்வாக சபை முன்னாள் தலைவர், கோம்பயன்மணல் இந்துமயான நிர்வாக அங்கத்தவர்
வயது 8310 நவம்பர், 1935 – 5 அக்டோபர், 2019
- பிறந்த இடம்
- வண்ணார்பண்ணை
- வாழ்ந்த இடம்
- சங்கானை, யாழ்ப்பாணம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுக31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!
எமது குடும்பத்தின் பாசத்தலைவனாய்
திகழ்ந்த எங்கள் அன்புத் தெய்வமே
எங்களின் வழிகாட்டியாய் வாழ்ந்து
அன்பையும் அரவணைப்பையும் தந்து
எங்களைத் தவிக்கவிட்டு அமைதியாய்
விண்ணுலகு சென்றீர்களே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
ஆண்டவனை வேண்டி நிற்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்திற்கு அன்மையில் உள்ள இடமும் நன்கு படித்த கலையறிவு கொண்ட சமுதாயமாகவும்,சேவை செய்யும் மனப்பான்மை பெற்ற மக்களையும் கொண்ட வண்ணார்பண்ணையில் 10/NOV/1935 ஆம் ஆண்டில் திரு.திருமதி சுப்பிரமணியம் நவமணிதம்பதிகளுக்கு அருமை மகனாக திரு.லோகநாதன் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் சிறுவயதில் அன்பும் பண்பும் கொண்டு கனகேஸ்வரி, ஏகாம்பரநாதன், பேரின்பநாதன், ருக்மணிதேவி, நாகேஸ்வரி, குகநாதன் போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரு.திருமதி செல்லத்துரை இராசம்மா தம்பதிகளின் அன்பு மகளாக புஸ்வராணி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.
முழுக் கதையையும் வாசிக்க
இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக குமுதினி, நந்தினி, குமணன், தாமோதரன் எனும் அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவராஜசேகர், மதியழகன், இலங்கேஸ்வரி என்பவர்களைத் திருமணம் முடித்து வைத்து துவாரகன், தனாதரன், யதுசாரகன், தரங்கினி, தர்மினி, புருஷோத், கீர்த்திகா, சுகிர்தன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
மேலும் நாடகக்கலைஞரான இவர் கலாபூசணம், கலைச்சூரியர், கலைவளிதி போன்ற விருதினைப் பெற்றதுடன், யாழ் மாநகரசபை உத்தியோகத்தராக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன்,சமாதான நீதிவானும், கேசாவில் முத்துவிநாயகர் நிர்வாக சபைத் தலைவராகவும்,கோம்பயன்மணல் இந்துமயான நிர்வாக அங்கத்தவராகவும் செயற்பட்டது மட்டுமல்லாது கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்த மனம் கொண்டவர்
இவ்வாறு மனைவி, பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 05.10.2019 இல் 83 வயதில் யாழ்ப்பாணத்தில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.
ஊரின் பெயரை உயர்த்தி நிமித்திய
யார் இவர் யாவரும் அறிந்த கலாபூசணர்
விருதுகள் பெற்று விடிவெள்ளி போல் பிரகாசித்த
அருமை உயிரே அனைவர் விரும்பியே
இனி எப்போ உமைக் காண்போம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

