ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் மயில்வாகனம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் மயில்வாகனம்

ஓய்வுபெற்ற தபாலதிபர்- உரும்பிராய் கருணை இல்ல ஆரம்பகால முன்னாள் காரியதரிசி

வயது 8623 டிசம்பர், 1934 – 27 டிசம்பர், 2020

பிறந்த இடம்
நயினாதீவு
வாழ்ந்த இடம்
உரும்பிராய், வெள்ளவத்தை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ்.நயினாதீவு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், உரும்பிராய், கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் மயில்வாகனம் அவர்கள் 27-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் அமராவதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கதிரித்தம்பி யோகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சவுந்தரம்(ஓய்வுபெற்ற விஞ்ஞான ஆசிரியை, உரும்பிராய் இந்துக் கல்லூரி) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ரமணி(லண்டன்- முன்னாள் சுருக்கெழுத்தாளர் பல்கலைக்கழக கல்லூரி, வவுனியா), மனோகரி(ஆசிரியை பரிசுத்த திருத்துவ மத்தியகல்லூரி- நுவரெலியா), பகீரதி(மருந்தாளர்- தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை, NMRA, கொழும்பு), மயூரதி(பிரான்ஸ்- முன்னாள் ஆசிரியை மண்டைதீவு மகாவித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான யோகம்மா, பாலசிங்கம்(சிவநெறிச்செம்மல்), செல்வராணி மற்றும் கலாபூசணம் கனகரத்தினம்(ஓய்வுபெற்ற கணக்குகள் சரிபார்த்தல் தலைமை அதிகாரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஸ்பாகரன்(முன்னாள் ஆசிரியர் இராகலை தமிழ் மகாவித்தியாலயம், லண்டன்), குபேரன்(ஆசிரியர்- நல்லாயன் மகளிர் கல்லூரி, நுவரெலியா), சிவானந்தன்(ஜனதா ஸ் ரீல், கொழும்பு), செந்தில்குமரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சி.நா.மதியாபரணம்(சமாதான நீதிவான்) மற்றும் லேவாதேவி, தில்லைநாயகி(ஓய்வுபெற்ற சங்கீத ஆசிரியை), காலஞ்சென்றவர்களான கிருஷ்ணசாமி(வர்த்தகர்), கனகம்மா மற்றும் சரஸ்வதி பெரியநாயகி(மருத்துவர்- நீர்கொழும்பு), ஆறுமுகம்(ஓய்வுபெற்ற உதவி சாலை முகாமையாளர் இலங்கை போக்குவரத்து சபை கோண்டாவில்), குணபூசணி, கதிரேசபிள்ளை(ஓய்வுபெற்ற உதவி கல்விப்பணிப்பாளர், வேலணை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசபாபதி(வர்த்தகர்), சொர்ணலிங்கம்(வர்த்தகர்), நடராசா(ஓய்வுபெற்ற தொழில் நுட்ப உத்தியோகத்தர்) மற்றும் திலகவதி, வரதலட்சுமி(ஓய்வுபெற்ற அதிபர் யாழ் இளையதம்பி இந்து வித்தியாலயம்) ஆகியோரின் அன்புச் சகலனும்,

மதியாபரணம்- யோகம்மா, குழந்தைவடிவேல்- வள்ளிப்பிள்ளை, திருநாவுக்கரசு- சரஸ்வதி, பரமலிங்கம்- தவமணி ஆகியோரின் அன்புச் சம்பந்தியும்,

சிந்துஜன்(இரசாயன பொறியலாளர், ITM POWER- UK), அபிராமி(கணக்காளர்,TAX & LINK COMPANY- லண்டன்), இலக்சியா, அனுசிகன், அக்சிகன்(இலங்கை), அக்சரன், அக்சிதா, அபிசரன்(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 30-12-2020 புதன்கிழமை அன்று கல்கிசை மகிந்த மலர்ச்சாலையில் மு.ப 09:00 முதல் பி.ப 01:00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 01:30 மணிக்கு இறிதிக்கிரியை நடைப்பெற்று அதனைத் தொடர்ந்து பி.ப 04:00 மணியளவில்கல்கிசை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. 26 ஜனவரி, 2021நன்றி நவிலல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.