ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் நரேந்திரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் நரேந்திரன்

வயது 613 பிப்ரவரி, 1958 – 16 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
அளவெட்டி
வாழ்ந்த இடம்
கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அளவெட்டி தெற்கு பெருமாக்கடவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நரேந்திரன் அவர்கள் 16-04-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற ஆறுமுகம் சுப்பிரமணியம், ஞானேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு மகனும், கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அம்பிகாவதி புஸ்பராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பிரபாஜி(கனடா) அவர்களின் அன்புக் கணவரும்,

கோபிதன், அபிஷன், சுஜீவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தெய்வேந்திரன்(ஜேர்மனி), இராஜேந்திரம்(கனடா), காலஞ்சென்ற தேவி(இலங்கை), நாகேந்திரம்(பிரான்ஸ்), சறோசாதேவி(கலா- கனடா), தருமகுலதேவி(சாந்தி- கனடா), சியாமளாதேவி(ஆச்சி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற குலராஜா(இலங்கை), பிரபாகரன், சாருசேகரம்(கனடா), குலதீசன்(கனடா), பிறேமாவதி(இலங்கை), காலஞ்சென்ற பிராபாகரன்(இலங்கை), கருணாகரன்(கனடா), செல்வரசி(கனடா), உமாதேவி(கனடா), சித்ரா(பிரான்ஸ்)ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தர்மபாலன்(பாலன்- கனடா) அவர்களின் பாசமிகு சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் செழிப்பு மிகு இடமும், நெல்வயல்கள், பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள், மிளகாய் வெங்காய வயல்கள், புகையிலைத் தோட்டம் என அழகு நிறைந்த அளவெட்டி தெற்கு பெருமாக்கடவையில் 03-02-1958 இல் ஆறுமுகம் சுப்பிரமணியம் ஞானேஸ்வரி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் நரேந்திரன் அவர்கள் தெய்வேந்திரன், இராஜேந்திரம், தேவி, நாகேந்திரம், சறோசாதேவி, தருமகுலதேவி, சியாமளாதேவி ஆகிய உடன் பிறப்புடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

மேலும் அன்பும் அழகும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் திருமணம் முடித்து வைக்க எண்ணிய பெற்றோர் கொக்குவில் கிழக்கைச் சேர்ந்த அம்பிகாவதி புஸ்பராணி தம்பதிகளின் அழகுப் பெண்ணான பிரபாஜி அவர்களை திருமணம் முடித்து வைத்தனர், இவர்கள் இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து கோபிதன்,அபிஷன்,சுஜீவன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார்.

குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார்.இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 16.04.2019 இல் 61 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

"அளவெட்டி தந்த
அற்புதக் குழந்தை
அன்பாக பேசி
அறிவை தந்து
பாரில் வாழ
பண்பை ஊட்டிய
அன்பு உறவே
அழுகிறோம் உமை நினைத்து "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.