ஆறுதல்

மரண அறிவித்தல்

சுப்பிரமணியம் இராசமணி அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் இராசமணி

வயது 9218 ஜூன், 1927 – 7 செப்டம்பர், 2019

பிறந்த இடம்
வேலணை கிழக்கு
வாழ்ந்த இடம்
Cergy

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். வேலணை கிழக்கு 1ம் வட்டாரம் மணியாரன் வீட்டடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இராசமணி அவர்கள் 07-09-2019 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளும், ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சுப்பிரமணியம் அவர்களின் பாசமிகு மனைவியும்,

கனகேஸ்வரி(தேவி- இலங்கை), காலஞ்சென்ற லோகேந்திரன்(லோகன்-Avron பிரான்ஸ்), குலேந்திரன்(மோகன்- cergy பிரான்ஸ்), இலங்கேஸ்வரி(வதனா- இலங்கை), லோகேஸ்வரி(மஞ்சுளா- பிரான்ஸ்), இலங்கேந்திரன்(ரதன் - cergy பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மலிங்கம், புஸ்பமலர், இந்திராணி, பாஸ்கரசிங்கம், நந்தகுமார், தவமலர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலெச்சுமி, பூங்காவனம், முத்தம்மா, சோதிமணி(இலங்கை), பஞ்சரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான மீனாட்சி, இராசம்மா, அம்பிகாநிதி, சிவமணி, முத்தையா, பரமானந்தம், அமுதலிங்கம், ஆசைரெத்தினம், பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஒழி- நடராசலிங்கம், அருள்- சிறிதரன், அறிவு- ஜெயராஜ், அன்பு- சத்தியபாலன், கௌரி- ஜெயக்குமார், றீகன்- நீரஜா, துளசி- ரமேஸ், சாமினி- அகிலன், புதர்சன்- டனியேலா, கியோம், புளோறியன், சுஜிகரன், தவினா, லதுஷன், லதுஷா, மக்சிம், சஜீவன், கெளசிகா, கிருதிகா, மதுசிகா, கேநிஷா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

லாவனியா, கார்த்திகா, பிரியாந், கஸ்தூரி, கேசவன், நிரோஜ், பிரவினா, ஜெனினா, அபிஷா, ரவினா, ஜெஸ்மி, கஸ்வின், லக்‌ஷா, அபிஸ்கா, டேனுஷா, அக்‌ஷா, அலெனா, அறியானா, நொலன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த வேலணை கிழக்கில் 18/JUN/1927 இல் திரு.திருமதி நாகலிங்கம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளான இராசமணி அவர்கள் அம்பலவாணர், சோமசுந்தரம், பொன்னுத்துரை, பாக்கியலெச்சுமி, பூங்காவனம், முத்தம்மா, சோதிமணி, பஞ்சரெத்தினம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி ஆறுமுகம் சிவக்கொழுந்து தம்பதிகளின் அழகிய ஆண் அழகான சுப்பிரமணியம் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கனகேஸ்வரி, லோகேந்திரன், குலேந்திரன், இலங்கேஸ்வரி, லோகேஸ்வரி, இலங்கேந்திரன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து தர்மலிங்கம், புஸ்பமலர், இந்திராணி, பாஸ்கரசிங்கம், நந்தகுமார், தவமலர் போன்றோரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த பேரப்பிள்ளைகளுடனும், பூட்டப்பிள்ளைகளுடனும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றுண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும் கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.

இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 07.09.2019 இல் 92 வயதில் பிரான்ஸ்ஸில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

”கண்ணாடி விழியால் கதைகள் பேசும்
பண்பான பாட்டியே பாசப் பூட்டியே
அன்பாக வளர்த்து அன்னம் ஊட்டிய
ஆசை உறவே பாச மலையே
காணத் தவிக்கிறோம் கருனை காட்டுங்கள்”

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.