மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் திவாகரன் (போலை)
Eestee Rest உரிமையாளர், கொழும்பு 4
வயது 5116 டிசம்பர், 1959 – 28 நவம்பர், 2011
- பிறந்த இடம்
- நயினாதீவு 2ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு, Eastham
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகநயினாதீவு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் இலண்டன் Eastham ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் திவாகரன் அவர்கள் 28.11.2011 திங்கட்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் விசாலாட்சி தம்பதிகளின் அருமை மகனும், காலஞ்சென்ற துரைசாமி மற்றும் நாகராணி(கொலண்ட்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஸ்ரீரஞ்சனி(இலண்டன்) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கஜேந்திரன், கவாஸ்கர், கபிலேந்திரன், கார்த்திப், கபினேஸ், கௌதனன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மங்களேஸ்வரி(இலங்கை), மகேஸ்வரி(கனடா), கனகாம்பிகை(கனடா) ஆகியோரின் அருமைச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், செல்வரெத்தினம் மற்றும் ஜெகநாதன்(கனடா), பாரிஸில் வசிக்கும் ஸ்ரீகாந்தன், ஸ்ரீரஞ்சன், ஸ்ரீகுமார், சந்தானகிருஷ்ணன், நெதர்லாந்தில் வசிக்கும் யோகலதா, நாகநந்தினி, கலைச்செல்வி, தர்சனி(இலண்டன்) ஆகியோரின் மைத்துனரும்,
கலைச்செல்வி, சுகிதா, சிவகாந்தன், சுகுணா, போல்கோலம்ப், வரதீசன், ஸ்ரீகாந்தன் ஆகியோரின் சகலனும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் இலங்கையில் நடைபெற்று பின் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

