1ம் ஆண்டு நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்ரமணியம் ஜெகதீஸ்வரன்
வயது 457 ஆகஸ்ட், 1964 – 31 ஆகஸ்ட், 2009
- பிறந்த இடம்
- அரியாலை
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅரியாலையை பிறப்பிடமாகவும், இலண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் ஜெகதீஸ்வரன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்த போதும்
ஆறாத்துயரத்தில் ஆழ்ந்திருக்கின்றோம் அப்பா!
அன்று ஆனந்த மழையில் நனையவைத்த எங்களை
இன்று கண்ணீர் மழையில் நனைய வைத்ததேனோ அப்பா!
ஒளி விளக்காய் இருந்ததெங்கள் குடும்பமின்று
இருள் சூழ்ந்து கொண்டதேனோ அப்பா!
அன்போடு அணைத்து எம்மை ஆசையுடன்
முத்தமிட்டு ஆசைப்பட்ட அனைத்தையும்
வேண்டி தரும் எம் அருமை அப்பாவை காண்பதெப்போ!
காத்திருந்தீர்கள் அப்பா எம்
முன்னேற்றங்களைக் காண கருணையில்லா
காலனவன் கவர்ந்து விட்டதேனோ
அம்மாவும், நாங்களும் ஆறாத்துயரத்தில்
அலை மோதுகின்றோம் அப்பா!
ஓராண்டு என்ன ஓராயிரம் ஆண்டுகள் சென்றாலும்
உங்கள் நினைவுகள் பசுமையாக எப்போதும்
எம் இதயத்தில் தெய்வமாய் சுமந்து நிற்போம்.
எம் அப்பாவின் ஆத்மா சாந்தியடைய
இறைவனை வேண்டி நிற்கின்றோம்.
— மனைவி, பிள்ளைகள்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

