ஆறுதல்

31ம் நாள் நினைவஞ்சலி

சுப்பிரமணியம் நாகேந்திரம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுப்பிரமணியம் நாகேந்திரம்

வயது 6816 டிசம்பர், 1948 – 24 மே, 2017

பிறந்த இடம்
மீசாலை கிழக்கு
வாழ்ந்த இடம்
மீசாலை கிழக்கு

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். மீசாலை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சுப்பிரமணியம் நாகேந்திரம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மாணிக்கம் நவமணி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மகாதேவி(தேவி அக்கா) அவர்களின் அன்புக் கணவரும்,

திவாகரன்(கனடா), சுபாகரன்(ஆசிரியர்- கண்டி/ இராஜவலை இந்து தேசிய பாடசாலை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

யோகராணி(கனடா), ஸ்ரீரஜனி(நல்லூர்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னராசா, குலேந்திரம், இராசேந்திரம், மற்றும் கன்னிகாதேவி, மகேந்திராதேவி, இந்திராதேவி, சந்திராதேவி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகாதேவன்(இளைப்பாறிய தொலைத்தொடர்பு திணைக்கள களஞ்சியப் பொறுப்பாளர்- மட்டக்களப்பு), தங்கராஜா(ஜெர்மனி), Dr. பிரபாகரன், மதிவதனி, கலைவாணி(உதவிக் கல்விப் பணிப்பாளர்- சங்கீதம், கண்டி), ஜோகேஸ்வரி, முருகசோதி, தவமணிதேவி, குணரத்தினம், சின்னத்துரை, ஆனந்தராஜா, உதயகுமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேஸ்வரி(நல்லூர்), இந்திராணி(ஜெர்மனி), Dr. தமயந்தி(கண்டி), லோகநாதன்(கெகிராவ), ஜெகதீஸ்வரன்(அளவெட்டி) ஆகியோரின் அன்புச் சகலனும்,

சாகிர்த்யா, தேஜஸ்வி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகளில் இருந்து தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாக அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 23-06-2017 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும். இந் நிகழ்வில் அனைவரையும் குடும்ப சகிதம் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைத்து நிற்கின்றோம்.

— திவாகரன்(மகன்)

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.