மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் நரபாலசிங்கம்
இளைப்பாறிய உப செயலாளர் அரசாங்க பொக்கிஷ இலாகா- இலங்கை, இளைப்பாறிய ஐக்கிய நாடுகள் சபை பொருளாதார அபிவிருத்தி திட்டமிடல் ஆலோசகர்
வயது 827 ஆகஸ்ட், 1935 – 17 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கொட்டடி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கொட்டடி சீனிவாசகம் வீதியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தை, லண்டன் Colindale ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நரபாலசிங்கம் அவர்கள் 17-08-2017 வியாழக்கிழமை அன்று லண்டனில் இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் மனோன்மணி(பூவம்மா) தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான நமசிவாயம் இராசநாயகி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற தயாநிதி அவர்களின் அன்புக் கணவரும்,
மணிவண்ணன்(மணி- லண்டன்), நளாயினி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன்(சச்சி), தையல்நாயகி(ஆச்சி), மற்றும் லோகநாயகி(இராசாத்தி- ஐக்கிய அமெரிக்கா), காலஞ்சென்ற பஞ்சாட்சரம்(அப்பு), Dr. தவீந்திரன்(இராசன்- ஓமான்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
துஷியந்தி(துஷி), தர்மராஜா(இராசன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
அமுதசாகரன், ஆனந்தசாகரன், ஞானசாகரன், யோகசாகரன், காலஞ்சென்றவர்களான அருள்சாகரன், கலாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சோபா, சண்ஜேய், சோழன், புருஷோத் ஆகியோரின் அன்புப் பாட்டனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

