மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பிரமணியம் இரவீந்திரன்
வயது 632 மே, 1956 – 8 ஜூலை, 2019
- பிறந்த இடம்
- உசன்
- வாழ்ந்த இடம்
- உசன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மிருசுவில் உசனைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் இரவீந்திரன் அவர்கள் 08-07-2019 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம், பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,
கார்த்திகா(கனடா), தர்சிகா(கனடா), சுவீத்தா(கனடா), கிசாந்(கனடா), கீர்த்திகா(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கணேசமூர்த்தி, இராதாகிருஸ்ணன், குகானந்தன், யெநனி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்ற தமீந்திரன், சுமிந்திரன், காலஞ்சென்ற சிறீதரன், திருச்சோதி, பிரகலாநிதி, பகீரதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மகேந்திரன், பிரபாகரன், காலஞ்சென்ற தியாகராசா, பரமநாதன், கிருஸ்ணபிள்ளை, புஷ்பநாதன், சிவக்கொழுந்து, இரசலட்சுமி, சிவமணி, லோசனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஆனந்தன், சிவராசா, சுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகலனும்,
மனோன்மணி, யோகேந்திராதேவி, தனேஸ்வரி, திலகா ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அர்விந், அஸ்விதா, ரகீர்த்தா, அதுசன், அதுசனா, நகீரா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பிற்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
நான்கு பக்கமும் கடலால் சூழ்ந்த அழகிய இலங்கைத் தீவில்.தமிழ் பேசும் மக்களும், கல்வி அறிவு கூடிய சமுதாயங்களைக் கொண்ட வடபுலத்தில், A9 வீதி ஊடறுத்துச் செல்லும் அழகிய தென்மராட்சியில் சகல வளங்களைக் கொண்ட மிருசுவில் உசனில் 02/MAY/1956 இல் திரு திருமதி சுப்பிரமணியம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனாக திரு. இரவீந்திரன் அவர்கள் இவ் அழகு நிறைந்த இடத்தில் மழலையாக அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தமீந்திரன், சுமிந்திரன், சிறீதரன், திருச்சோதி மற்றும் பிரகலாநிதி, பகீரதன் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், வேலுப்பிள்ளை சின்னாச்சி தம்பதிகளின் மகள் பாக்கியம் எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து கார்த்திகா, தர்சிகா, சுவீத்தா, கிசாந், கீர்த்திகா போன்ற அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து கணேசமூர்த்தி ,இராதாகிருஸ்ணன், குகானந்தன், யெநனி போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து அர்விந், அஸ்விதா, ரகீர்த்தா, அதுசன், அதுசனா, நகீரா போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் அனைவருடனும் நகைச்சுவையாக பேசுவதுடன் அன்பான அரவணைப்பால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.07.2019 இல் 63 வயதில் உசனில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.
உசன் மண்ணின் உயர்ந்த
உள்ளமே
பாசம் கொண்ட பாவை
மனமே
நிஜமாக வாழ்ந்த நிறை
மதியே
கஜ பலமுடன் மிளிர
வாழ்ந்து
காலமதில் மறைந்து ஞாலத்தில்
உயர்ந்தீர்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

