நன்றி நவிலல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுகந்தமலர் பாலச்சந்திரன்
வயது 637 மே, 1956 – 17 ஆகஸ்ட், 2019
- பிறந்த இடம்
- புங்குடுதீவு 6ம் வட்டாரம்
- வாழ்ந்த இடம்
- காரைநகர் பாலாவோடை, வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஅன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், இறுதி நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்திய உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், சகல நிகழ்வுகளிலும் எம்முடன் கைகோர்த்து இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
— குடும்பத்தினர்
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த புங்குடுதீவு 6ஆம் வட்டாரத்தில் 07/MAY/1956 இல் திரு.திருமதி S.N.K.சுந்தரம் மீனாட்சியம்மா தம்பதிகளின் அருமை மகளாய் சுகந்தமலர் அவர்கள் செல்வராணி, சுந்தரமோகன், சுந்தரபவானி, சுந்தரரூபன், மீனாகுமாரி போன்ற சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி A.s சங்கரப்பிள்ளை வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகன் A.S சங்கரப்பிள்ளை & Sons பங்காளரான திரு.A.S.S பாலச்சந்திரன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக Dr.வள்ளிதர்ஷினி( யாழ். போதனா வைத்தியசாலை), பாலசங்கரி(ஆசிரியை Xcellence international school - கொழும்பு), கார்த்தியாயினி(Synergen health கொழும்பு) எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் மலர் என அன்பாக அழைக்கப்படும் இவர் காரைநகர் பாலாவோடையில் வாழ்ந்ததுடன், வீட்டை அழகாக வைத்திருப்பதில், பூமரங்கள் வளர்பதிலும் அலாதி விருப்பம் கொண்டவராகவும்,அனைவருக்கும் உதவி செய்வதிலும்,ஊரவருடன் அன்பாக பேசுவதுடனும் இரக்க குணம் கொண்ட நல் உள்ளமாக விளங்கினார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 17.08.2019 இல் 63 வயதில் கொழும்பில் உள்ள வெள்ளவத்தையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.
புங்குடுதீவு மண்ணில் புகழுடன் வாழ்ந்த
தங்க உறவே எங்கள் பாச உயிரே
எங்கும் நிறைந்த உங்கள் நினைவுடன்
அங்கம் உருக அழுது புலம்புகிறோம்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

