மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுஜித்தா காண்டீபன்
வயது 3211 ஜனவரி, 1987 – 11 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- Thondaimanaru
- வாழ்ந்த இடம்
- London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டமனாற்றைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட சுஜித்தா காண்டீபன் அவர்கள் 11-04-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான தியாகராஜா, கிளி தம்பதிகள், காலஞ்சென்ற மாணிக்கவாசகர்(சிவலிங்கம்), தவமலர் தம்பதிகளின் அன்புப் பேத்தியும்,
காலஞ்சென்ற தவராஜா(தவம்), அமுதலர் தம்பதிகளின் அன்பு மகளும், நாகராசா மகாலட்சுமி தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
காண்டீபன் அவர்களின் அன்பு மனைவியும்,
வான்முகிலன், பூமிகா, சமராளன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறீகாந்தன்(காந்தன்) அவர்களின் பாசமிகு பெறாமகளும்,
சற்குணம், தவனேஸ்(சுவிஸ்), நேசன்(லண்டன்), குட்டி(சுவிஸ்), மோகன், விஜயா, சின்னக்கி்ளி ஆகியோரின் அன்பு மருமகளும்,
இராசா(பிரான்ஸ்), ஜெயம்(நோர்வே), வனிதா, அம்மனி, லலி(பிரான்ஸ்) ஆகியோரின் பாசமிகு பெறாமகளும்
சுஜிந்தன்(அவுஸ்திரேலியா), லக்சனா(ஜேர்மனி), லக்ஸ்மன்(சுவிஸ்), பிரவின்ராஜ்(இலங்கை), லக்சாயனி(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பத்தினி(பிரான்ஸ்), உமா(லண்டன்), கார்த்திக்(லண்டன்), தாரணி(கனடா), கெங்கன்(லண்டன்), தரன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
வாழ்க்கை வரலாறு
இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,அறிவு நிறைந்த இளைஞர்களைக் கொண்டதும், வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், தொன்மை நிறைந்த கோவில்கள் என அழகு நிறைந்த தொண்டமனாறில் 11-01-1987 இல் தவராஜா அமுதமலர் தம்பதிகளுக்கு அன்புப் புதல்வியாக சுஜித்தா அழகிய குழந்தையாக அவதரித்தார்.
அன்பும் பண்பும் நிறைந்த இவர் சுஜிந்தன்,லக்சனா,லக்ஸ்மன்,பிரவின்ராஜ்,லக்சாயனி போன்ற உடன் பிறப்புகளுடன் கூடி குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் நாகராசா மகாலட்சுமி தம்பதிகளின் அழகு மகன் காண்டீபன் என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வான்முகிலன், பூமிகா, சமராளன் எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்று கண்ணெனக்காத்து வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
இவர் பொறுமை சாலியாகவும் அறிவு நிறைந்தவராகவும் விளங்கினார், குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்ததுடன், சுவையான உணவுகள் செய்வதிலும், வீட்டை சுத்தமாக வைத்திருப்பதை கடமையாக எண்ணிச் செயற்பட்டார்.
இவ்வாறு கணவன், பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 11-04-2019 இல் 32 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"வதன முகம்......
வாடிச் சுருண்டது
வாழ்வில் ஒரு......
வசந்தம் மாறியது
அன்பு உறவு ஒன்று....
அகிலம் துறந்தது
அன்னை மடி தேடி.....
அலைகிறோம் கண்ணீருடம்""
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

