ஆறுதல்

நன்றி நவிலல்

சுமதி இராஜகரன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சுமதி இராஜகரன்

முன்னாள் ஆசிரியை- வட இந்து மகளிர் கல்லூரி

வயது 5310 பிப்ரவரி, 1966 – 28 நவம்பர், 2019

பிறந்த இடம்
அல்வாய்
வாழ்ந்த இடம்
Montreal

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். அல்வாய் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி இராஜகரன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
அழியாத நினைவலைகள் எம் அடிமனதின்
ஆழத்தில் இருந்து வதைக்கிறதே அம்மா
என் செய்வோம் நாங்கள்?

காயங்கள் ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் குடும்பத்தினர்

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு, இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும், மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

— குடும்பத்தினர்

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களையும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன்,நீண்டு வளர்ந்த பனை மரங்களையும், மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த அல்வாய் வடக்கில் 10/FEB/1966 ஆம் ஆண்டில் திரு திருமதி பொன்னையா செல்வராஜா, ஸ்ரீபவாதேவி தம்பதிகளின் அன்பு மகளாக சுமதி அவர்கள் அழகுக் குழந்தையாக இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்து இவர் சூரியகுமார், ஸ்ரீகுமார், சதாம்பிகை, செல்வஜோதி, அனி போன்ற உடன்பிறப்புகளுடன் வளர்ந்து பெரியவளாகியதும்,திரு திருமதி சின்னத்தம்பி துரைசிங்கம், அருளம்மா தம்பதிகளின் மகனான இராஜகரன்(ராயூ) எனும் வீரம் நிறைந்த ஆண் மகனைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்த இவர்கள் இருவரின் வாழ்க்கைப் பயனத்தில் வம்ச விருத்தியாக துளசி, அபிராமி, வரூன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

மேலும் நன்கு படித்த இவர் வட இந்து மகளிர் கல்லூரியின் ஆசிரியையாக கடமையாற்றி ஓய்வு பெற்றதுடன் கனிவான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும் கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பெறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார், இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள்,நண்பர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த இவர் 28.11.2019 இல் 53 வயதில் கனடாவில் உள்ள Montreal நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

அல்வாய் மண்ணின் அன்பு உள்ளமே
செவ்வாய் மகளே செந்தமிழ் உயிரே
நல்லாய் பேசி நன்மைகள் புரிந்து
கண்ணாய் எம்மை கவனித்த உறவே
மண்ணாய் போன மகத்தான மனைவியே
என்னாலும் நினைவில் நித்தம் தொடருவோம்

பிற அறிவித்தல்கள்

  1. 29 நவம்பர், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →
  2. ஆண்டு நினைவஞ்சலி · 26 நவம்பர், 20201ம் ஆண்டு நினைவஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.