மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுமதி வேலழகன்
பழைய மாணவி- உரும்பிராய் இந்து கல்லூரி
வயது 5331 ஜனவரி, 1967 – 1 நவம்பர், 2020
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- பிரித்தானியா, Morningside, Scarborough
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா, கனடா Morningside, Scarborough ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுமதி வேலழகன் அவர்கள் 01-11-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா யோகரட்ணம், பராசக்தி(உரும்பிராய்) தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சண்முகதாசன் வேலாயுதம், ரஞ்சிதமலர்(கனடா) தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ஷான் வேலழகன் அவர்களின் அன்பு மனைவியும்,
சசிலேகா(பிரித்தானியா), சாந்தினி(சாந்தா- பிரித்தானியா), சிவகுமார், சிவயோகன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மாறன் சண்முகதாசன்- ராதிகா(கனடா), மேகலா- இராசரத்தினம்(கனடா), சந்திரதாஸ்(பிரித்தானியா), அசோகன்(பிரித்தானியா), குமுதா(பிரித்தானியா), அஜித்தா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மதுமிர்ரா, அக்ஷிதா, ஆனந்த், அர்ஜுன், Thenushya, பிரதிஷ்யா, கவிதா, கபிலன், ஆகாஷ் ஆகியோரின் அன்பு அத்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
சமர்ப்பணம்
அன்பாலே யாவரையும் அரவணைத்து, எல்லோருக்கும் நல்லவராய், அமைதியுடனும், ஆதரவுடனும் பாசமொழி பேசி, எம்நலத்திற்கும், வளர்ச்சிக்கும் உறு துணையாகவும், வழிகாட்டியாகவும், பக்கபலமாகவும் நின்று இன்றுவானுறையும் தெய்வமாகிவிட்ட, எங்கள்அன்புத் தெய்வத்திற்கு இம்மலரினைசமர்ப்பிக்கின்றோம்.
முழுக் கதையையும் வாசிக்க
என்றும் நீங்கா இனிய நினைவுகளுடன்
கணவர்,சகோதரங்கள்,மற்றும் குடும்பத்தினர்.
வாழ்க்கைச்சரிதம்
இலங்கைத் திருநாட்டின் வடக்கே, யாழ்ப்பாணக்குடாநாட்டின் மத்தியில், கனிதரும்மரங்களும், காசுப்பயிர்களும் செழித்திடும் செம்மண் பூமியாம் உரும்பிராய். கிராமத்தின் வடக்கே சைவவேளாண்குடி மரபில்சீரும், சிறப்பும், உயர்வும்மிக்க பரம்பரையில் உதித்தவர் காலஞ்சென்ற புகையிரத நிலையஅதிபர் செல்லையா யோகறட்ணம் அவர்கள். அன்னார் மலேசியாவைப் பிறபிடமாகக்கொண்ட அத்தை மகளாம், காலஞ்சென்ற அமைதியான,அடக்கமான பராசக்தி என்ற அழகிய நங்கையை இல்லறத்தின் துணையாகக்கொண்டார். அவர்களது இல்லற வாழ்வின் பெரும் பயனாய், கற்பகவிநாயகன் திருவருளால் ஐந்து அழகிய குழந்தைகளைப் பெற்றெடுத்தனர். இவர்களில் சசிலேகா, சாந்தினி, சிவகுமார், சிவயோகன் ஆகியோருடன் கடைக்குட்டியாகப்பிறந்தவரே அமரர் சுமதி வேலழகன் அவர்கள்.
இயற்கையாகவே பெண்களுக்கு இருக்க வேண்டிய அத்தனை பண்புகளையும் தன்னகத்தே கொண்டவராகத் திகழ்ந்தார். ஆறுவயதிலேயே தந்தையாரைப் பறிகொடுத்து தாயாரின் அரவணைப்பில் வளர்ந்தார். மூத்தசகோதரிகள் இருவரும் திருமணத்தின்பின் வெளிநாடுகளுக்குப் பயணம் போயினர். மூத்த அண்ணனும் மேற்படிப்புக்காக இலண்டன் சென்றார். தாயாரோடும் சின்ன அண்ணன் சிவயோகனோடும் உரும்பிராய் வீட்டில் வாழ்க்கையைத் தொடர்ந்தார். உரும்பிராய் இந்துக்கல்லுாரியில் கல்விகற்ற அதேநேரத்தில் தாயாரின் சுகயீனம் காரணமாக குடும்பப் பொறுப்புகளையும்,குடும்பத்தை நிர்வகிக்கும் திறமைகளையும் தாயிடமிருந்து கற்றுக்கொண்டார்.
சின்னண்ணா சின்னண்ணா என்று சிவயோகனோடு உயிராய் இருந்தார். சகோதரங்களாய் இணை பிரியாதவர்களாக, ஓரேவகுப்பிலும் படித்ததனால் மற்றவர் பார்த்துவியக்கும்படி வாழ்ந்துவந்தனர். தாயாரின்திடீர் மறைவு 1987ஆம்ஆண்டில் அமரர் அவர்களது வாழ்க்கைப் பாதையை மாற்றியது. சின்னண்ணா சிவயோகனோடு இலண்டனுக்கு 1989இல் மற்றைய சகோதரங்களின் நிழல்தேடி வந்தனர்.
1992ம்ஆண்டு டிசம்பர் 4ஆந்திகதி, நவாலியைச்சேர்ந்த காலஞ்சென்ற சண்முகதாசன், ரஞ்சிதமலர் தம்பதிகளின் மகனும், இளவயதிலேயே சாம்பியாவுக்கு இடம்பெயர்ந்தவரும், இலண்டனில்கல்வி கற்று, கனடாவில்தொழில் புரிந்தவருமான வேலழகனை ஈஸ்ட்காம் முருகன் முன்பாக வாழ்க்கைத் துணைவராக கரம்பிடித்து,1 993 இல்கனடாவுக்கு பயணமாகி சட்டப்படிஅங்கு திருமணம் செய்தார்.
இன்பமாய்கடந்தது அவர்களது 27 வருடகுடும்ப வாழ்க்கை. இவ்வுலக இன்பவாழ்க்கையின் முடிவாய் கடந்தபத்து மாதங்களாய் பீடித்த கொடும்நோய் அவரைவாட்டி உருக்குலைத்தபோதும் கடைசிவரை படுக்கையில் விழுத்தும்வரை குடும்பத்தலைவியாய்தன் கடமைகளை செவ்வனே செய்துவந்தமைபோற்றுதற்குரியது. ஈற்றில் கடந்த நவம்பர் முதலாந் திகதி இரவு 9மணியளவில் எமை ஆறாத்துயரில் ஆழ்த்தி மீளாத்துயில் கொண்டு விட்டார். அந்தக்கொடிய நோயதுதாக்கம் புனித ஆத்மாவாம் அமரர்சு மதி வேலழகனுக்கு ஆண்டவன் திருவடி தன்னில் சரணாகதி தந்தது.
அன்புக்கணவர், ஆசைச்சகோதரங்கள், மாமியார், மைத்துனர்கள், மைத்துனிகள், அத்தான்கள், அண்ணிமார்கள், மருமக்கள், பெறாமக்கள், அவர்களது குடும்பங்கள், மற்றும் உறவுகள், நட்புகள் என்று தேடித் தேடி பாசங்கொட்டிய இனிய துாய்மையான ஆத்மா இறைவன் திருவடியில் பேரின்பப் பெரு வாழ்வு பெற இறைவனைப் பிரார்த்திப்போமாக.
ஓம்சாந்தி! ஓம்சாந்தி! ஓம்சாந்தி!
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

