மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரம் சிவகுரு
வயது 9227 செப்டம்பர், 1926 – 17 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- வல்வெட்டித்துறை
- வாழ்ந்த இடம்
- பருத்தித்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வல்வெட்டித்துறை கத்தோக்கடியைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறையை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரம் சிவகுரு அவர்கள் 17-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற அன்னமாணிக்கம் அவர்களின் அன்புக் கணவரும்,
சிவானந்தலீலா, சிவானந்தராணி, சிவானந்தமலர், சிவானந்தமணி(லண்டன்), சிவானந்ததேவி(இந்தியா), சிவானந்தபுஸ்பம், சிவசிதம்பரம்(லண்டன்), சிவசோதிலிங்கம்(லண்டன்), சிவானந்தசுந்தரி(இந்தியா), சிவகுமார், சிவகணேஷ்(லண்டன்), சிவசங்கர்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செந்தில்வேல், சிவானந்தராஜா, ஜஸ்டின் பெர்னாந்து, மற்றும் சிவதாஸ்(லண்டன்), சுந்தரலிங்கம், கமானி(லண்டன்), ராகினி(லண்டன்), பிரவீன்(இந்தியா), பவானி, ராஜினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-09-2019 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
வாழ்வில் கஷ்டப்பட்டு முன்னேறியவரும், தனது அன்பான உபசரிப்பால் எல்லோர் மனதையும் கவர்ந்தவருமான சிவகுரு அவர்களின் வாழ்க்கை வரலாறிது...
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் 27/SEP/1926 இல் சுந்தரம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனாக சிவகுரு அவர்கள் இவ் அவனியில் அவதரித்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
அன்பும் அறிவும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவரானதும் அன்னமாணிக்கம் என்பரைத் திருமணம் முடித்து, சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சிவானந்தலீலா, சிவானந்தராணி, சிவானந்தமலர், சிவானந்தமணி,சிவானந்ததேவி, சிவானந்தபுஸ்பம், சிவசிதம்பரம், சிவசோதிலிங்கம், சிவானந்தசுந்தரி,சிவகுமார், சிவகணேஷ், சிவசங்கர் போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணிபோல பாதுகாத்து வளர்த்து,செந்தில்வேல், சிவானந்தராஜா, ஜஸ்டின் பெர்னாந்து, சிவதாஸ், சுந்தரலிங்கம், கமானி, ராகினி,பிரவீன், பவானி, ராஜினி போன்றோரைத் திருமணம் முடித்து வைத்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.
எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரான இவர், தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர். மேலும் வாழ்வில் அன்பும் கருணையும் கொண்டு உதவிகள் புரிந்து, குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.
வீட்டிற்கு வரும் விருந்தாளிகளை உபசரிப்பதில் வல்லவரான இவர், தனது உறவுகளிடத்தில் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதனை அடிக்கடி கூறி வந்தார்.
இவ்வாறு பிள்ளைகள், மருமக்கள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்து வந்த இவர் 17.09.2019 இல் 92 வயதில் பருத்தித்துறையில் காலமானார்.
"அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே
அன்போடு எங்களை அனுதினமும் அரவணைத்தவரே
அல்லும் பகலும் அயராமல் எமைக் காத்தவரே
அன்பையும் பண்பையும் பாசத்தையும்
நேசத்தையும் எங்களுக்கு கற்பித்து
சொல்லாமல் எங்களை விட்டு மறைந்த நீங்கள்
வின்னோக்கிச் சென்றாலும்
கண் விட்டு மறையாமல்
கண காலம் இருப்பீர்கள்"
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

