மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுந்தரலிங்கம் பிறேமச்சந்திரன்
வயது 5312 ஏப்ரல், 1966 – 29 ஏப்ரல், 2019
- பிறந்த இடம்
- மீசாலை வடக்கு
- வாழ்ந்த இடம்
- டென்மார்க், Mississauga
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். மீசாலை வடக்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், கனடா Mississauga ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட சுந்தரலிங்கம் பிறேமச்சந்திரன் அவர்கள் 29-04-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம்(மலேரியா தடை மேற்பார்வையாளர்) மீனாட்சிப்பிள்ளை(இளைப்பாறிய ஆசிரியை- மந்துவில் ஸ்ரீபாரதி) தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற பாலசுந்தரம்(றெஜீமென்ரல் சார்ஜன் மேஜர்), செல்வமணி தம்பதிகளின் அருமை மருமகனும்,
மாதினி அவர்களின் அன்புக் கணவரும்,
அம்சவி, அக்ஷவி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பிறேமா, பிறேமளா ஆகியோரின் ஆருயிர்ச் சகோதரரும்,
கணேசமூர்த்தி, கோடீஸ்வரன், காலஞ்சென்ற மகேந்திரன், மனோகரன், மாலதி, மனமோகன், கதிர்வேல், ஞானச்செல்வி, ஞானவேல், தங்கவேல் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
புஸ்பலீலா, காலஞ்சென்ற சிவபாதசுந்தரம்(நாதன்), புஸ்பராணி, புஸ்பநிதி, சிவஞானசுந்தரம் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
கஜந்தி சாரங்கன், கஜந்தன், அர்த்தனி, அபிசயா, சங்கீதா, கானன், ரூபன், காலஞ்சென்ற ஆதீசன், வாகீசன், விமல், விபுல், கோபிநாத், கோகுல்நாத், ராகுல்நாத், தக்சாயினி, துளசிகா, தர்மிகா, அனுஸ்ணவி ஆகியோரின் பாசமிகு மாமாவும்,
ராகவி, வைஷ்ணவி, கார்த்திகன், கயல்விழி, பிரணவன், மலர்விழி, சர்மிளா, நிறோ, சாளினி ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வாழ்க்கை வரலாறு
யாழ்ப்பாணத்தில் அழகிய தென்மராட்சியில் நெல்வயல்களும்,மிளகாய்செடிகளும் வெங்காய வயல்களும்,மரக்கறித் தோட்டங்களும் பழவகைகள்,பயன்தரு மரங்கள் என செழிப்பு மிகுந்த மீசாலை வடக்கில் 12/APR/1966 இல் மலேரியா தடை மேற்பார்வையாளராக கடமை புரிந்த சுந்தரலிங்கம் மீனாட்சிப்பிள்ளை(ஆசிரியை) தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் பிறேமச்சந்திரன் அவர்கள் பிறேமா, பிறேமளா ஆகிய உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.
அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் றெஜிமென்ரல் சார்ஜன் மேஜராக விளங்கிய பாலசுந்தரம் செல்வமணி தம்பதிகளின் அன்பு மகள் மாதினி அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து அம்சவி, அக்ஷவி எனும் அழகுப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்தார்.
முழுக் கதையையும் வாசிக்க
மேலும் டென்மார்க்கில் பல காலம் வாழ்ந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராகவும் பொறுமைசாலியாகவும் விளங்கியதுடன், இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டும் விளங்கினார், .இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29.04.2019 இல் 53 வயதில் கனடாவில் உள்ள Mississauga நகரில் இறையடி எய்தினார், அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.
"முழு மதியே எங்கள் முத்தே
சிதறி வீழ்ந்து சிலையானாய் மனதில்
நெஞ்சு வெடித்து பஞ்சானது வாழ்வு
நித்தம் உங்கள் நினைவே மனதில்"
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

