ஆறுதல்

மரண அறிவித்தல்

பிறப்பு15 ஏப்ரல், 1968
இறப்பு29 மார்ச், 2019
சுப்பிரமணியம் புண்ணியலிங்கம் அவர்களின் படம்

சுப்பிரமணியம் புண்ணியலிங்கம்

வயது 50

பிறந்த இடம்
நெடுந்தீவு
வாழ்ந்த இடம்
பெரியதம்பனை, London

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், பெரியதம்பனை, லண்டன் Kingston ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் புண்ணியலிங்கம் அவர்கள் 29-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும், சந்தான், கத்தரீன் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புனிதசீலி(Rosy) அவர்களின் அன்புக் கணவரும்,

றூத்ஷீலா, நிஷாலினி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் அழகிய இடமும், தீவுக்கூட்டங்களில் பெரிய தீவும் கடலுணவு, கால்நடை வளர்ப்பு, தெங்குத்தோட்டம், மிளகாய்தோட்டம், மரக்கறி தோட்டம் என செழிப்பு மிகு தீவான நெடுந்தீவு கிழக்கில் 15-04-1968 இல் சுப்பிரமணியம் கண்மணி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாய் புண்ணியலிங்கம் அவர்கள் இவ் அழகு நிறைந்த தீவில் அவதரித்தார்.

மேலும் அன்பும் ஆளுமையும் நிறைந்த இவர் வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் அழகிய வாலிபனானதும் சந்தான் கத்தரீன் தம்பதிகளின் அழகுப் பெண்ணாண Rosy எனும் புனிதசீலி அவர்களை திருமணம் முடித்து இனிமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து றூத்ஷூலா, நிஷாலினி எனும் அன்பு நிறைந்த பிள்ளைகளைப் பெற்றெடுத்து பாசமாகவும் பண்பாகவும் பாதுகாத்து வளர்த்தார்.

முழுக் கதையையும் வாசிக்க

இவர் கடின உழைப்பாளியாக திகழ்ந்ததுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவர், இதேவேளை இவரைச் சூழ்ந்து எப்போதும் நண்பர்கள் கூட்டம் நிறைந்து காணப்படும், ஏனெனில் நகைச்சுவையாக உரையாடுவதில் திறமையானவராக திகழ்ந்தார்.

இவ்வாறு மனைவி, பிள்ளைகள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 29-03-2019 இல் 50 வயதில் பிரித்தானியாவில் உள்ள லண்டன் நகரில் இறையடி எய்தினார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்போம்.

"தீவின் முத்தே
தித்திக்கும் கரும்பே
பாச மலரே
பார் போற்றும் வீரனே
நேசம் கொண்டு
நெஞ்சில் உறைந்தவனே
காலம் உள்ளவரை
கலங்கும் எம் மனம் "

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.