மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சுப்பர் வேலுப்பிள்ளை
இளைப்பாறிய உதவி அரசாங்க அதிபர் AGA- கிளிநொச்சி, அகில இலங்கை சமாதான நீதவான் (All Island JP)
வயது 9029 ஆகஸ்ட், 1929 – 15 நவம்பர், 2019
- பிறந்த இடம்
- கைதடி
- வாழ்ந்த இடம்
- வெள்ளவத்தை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கைதடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பர் வேலுப்பிள்ளை அவர்கள் 15-11-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சுப்பர், கற்பகம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சுப்பிரமணியம் தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற சரோஜினிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
சுரேந்திரன், நிமலேந்திரன், சத்தியேந்திரன், மோகேந்திரன், கஜேந்திரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை, தெய்வானைப்பிள்ளை, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரபாகினி, சுகாநந்தினி, ஜயந்தினி, சுகந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஜனோன், ஜனினா, அஜனன், அபிதன், வினுசன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்றவர்களான செல்லம்மா, ஆறுமுகம், சுப்பையா, பரமேஸ்வரி, கோடீஸ்வரன் மற்றும் யோகேஸ்வரன், செல்வராசா, மகேஸ்வரி, கமலாஜினிதேவி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 19-11-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரையும் 20-11-2019 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் ஜயரட்ன மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, ந. ப 12:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பி.ப 02:00 மணியளவில் பொரளை கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

